May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் – பழங்குடியினர் தொழில் தொடங்க வாய்ப்பு

1 min read

Adi Dravidar – Opportunity for tribals to start business – Tenkasi District Collector Information

27.5.2023
தமிழக அரசு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனையேராக்கி அவர்களை ஊக்குவிக்கும் வகையில் அண்ணால் அம்பேத்கர் வணிக சாம்பியன் திட்டம் எனும் புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளது எனவே தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;-

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரை தொழில் முனைவோராக்கி அவர்களின் பொருளாதார வளர்ச்சிவை . ஊக்குவிக்கும் வகையில் அண்ணல் அப்பேத்கர் வணிக சாம்பியன் திட்டம் என்ற பதிய முன்னோடித் திட்டம் 2023-24 – ஆம் நிதியாண்டில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட உள்ளது .
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வருப்பைச் சேர்ந்த தொழில் முனைவோர்கள் தொழில் தொடங்கும் ஆரம்ப நிலையில் எதிர்கொள்ளும் நிதிச்சுமையை தவிர்ப்பது மற்றும் தேவையான வளகளை பெறுவதை எளிதாக்குவது இத்திட்டத்தின் நோக்கம் ஆகும் .

மேலும் தொழில் முனைவோர்களின் ஒட்டுமொத்த செலவை கணிசமாக குறைத்து தொழில் முனைவோர்கள் தங்கள் வணிகத்தில் ஆர்வமுடன் முதலீடு செய்வதை ஊக்குவிக்கவும் இக்திட்டம் பெருதவியாக இருக்கும் .

இத்திட்டத்தின் மூலம் துவங்க இருக்கும் தொழில்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் அரசின் மூலதன மானியமாக வழங்கப்படும் . திட்ட பதிப்பீடானது தொழில் துயங்க தேயையான கட்டிடம் , இந்திர தாலாடங்கள் , உபகரணங்கள் மற்றும் சோதனை . கருவிகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும் . அதிகபட்ச மானியம் ரூ .1.50 கோடியாகும் . மேலும் , கடனை திருப்பி செலுத்தும் காலம் முழுவதும் 6 சதவீத வட்டி மானியமும் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது . இந்த திட்டத் தொகையில் 65 சதவீதம் வங்கி கடனாகவும் மீதம் 35 சதவீதப் அரசின் பங்காக முன்முனை மூலதன மானியபாகவும் வழங்கப்படும் .எனவே பயனாளர்கள் தங்கள் சொந்த முதலீடாக எதுவும் செலுத்த தேவையில்லை .

இத்திட்டத்தின் கீழ் விணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு 55 ஆக நீர்ணயிக்கப்பட்டுள்ளது . இத்திட்டத்தில் பயன்பெற குறைந்தபட்ச கல்வி தகுதி எதுவும் தேவையில்லை . இத்திட்டத்தின் மூலமாக புதிய தொழில் முனைவோர்கள் மற்றும் ஏற்கனவே தொழில் செய்து வரும் தொழில் முனைவோர்களும் புதிதாக தொழில் தொடங்கவும் , ஏற்கனவே உள்ள தொழிலை விரிவாக்கம் செய்யயவும் விண்ணப்பிக்கலாம் . எஸ்சி மற்றும் எஸ்டி பிரியை சேர்ந்த தனி நபர் மற்றும் எஸ்சி மற்றும் எஸ்.டி.பிரிவை சேர்ந்தவர்களின் முழு உரிமை கொண்ட தனியுரிமையாளர் , பங்குதாரர் கூட்டாண்மை . ஒரு நபர் கம்பெனி , பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறலாம் . இந்திட்டத்தின் மூலமாக வியாபாரம் , சேவை மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு கட்டிடம் , இடந்திரங்கள் , சோதளைக் கருவிகள் , கணிணி சார்ந்த பொருட்கள் , மற்றுன் தொடங்கப்படும் தொழிலுக்கு தேயைப்படும் வாகனங்கள் ங்கவும் இத்திட்டத்தில் மானியத்துடன் கடன் வழங்கப்படும் . ஆயத்த ஆடைகள் உற்பத்தி , உணவு பொருட்கள் உற்பத்தி , மளிகை கடை , வணிக பொருட்களின் மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை , உடற்பயிற்சி கூட அலுகு நிலையம் செப்டிக் டேங்க் கிளிளிங் , அறுவடை இயந்திரம் மற்றும் அறுவடைக்கு பின் தேயைப்படும் இயந்திரம் , குளிர்பதன கிடங்கு , சேமிப்பு கிடங்கு , சுல்யாண மண்டபம் , லாட்ஜ்கள் , பெட்ரோல் பம்பு , எரிவாயு ஏஜென்ஸி , குடோன்கள் , கான்கிரீட் மிக்ஸ்சர் , உணவகம் , ஆட்டோ , டாக்ஸி , ஆம்புலன்ஸ் , டிராவல்ஸ் , போர்வெல்ஸ் , லாரி , வேன் , போன்ற வாகனங்கள் , ஜேசிபி , ஹிட்டாச்சி ( Hitach ) போன்ற களரக வாகளங்கள் வாங்குவதற்கும் விண்ணப்பிக்கலாம் . நேரடி விவசாயம் சார்ந்த தொழில்கள் மேற்கொள்ள இத்திட்டத்தில் வழிவகை இல்லை . மேற்காணும் திட்டம் தொடர்பாக விழிப்புணர்வு முகாம் வருகிற 29.05.202 அன்று மதியம் 3.00 மணியளவில் தென்காசி மாவபட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் துரை இரவிச்சந்திராள் , தலைமையில் நடைபெற உள்ளது . எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவை சேர்ந்த தொழில் தொடங்க ஆர்வமுள்ளோர் இந்த விழிப்புணர்வு முகாமில் கலந்து வொண்டு திட்டம் தொடர்பான அனைத்து வழிமுறைகள் மற்றும் விண்ணப்பிப்பது தொடர்பான வழிகாட்டுதல்கலை பெற்று பயன் பெரறக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

மேலும் இந்த திட்டம் தொடர்பான விளக்கங்களுக்கு 39273263 மற்றும் 04633-21-2347 என்ற தொலைபேசி ர்களிலும் பொது மேலார் , மாவட்ட தொழில் மையம் , திருமலைக்கோவில் ரோடு , குத்துக்கல்வாசை , தென்காசி மாவட்டம் என்ற முகவரியில் நேரிலும் தொடர்பு கொண்டு பயன் பெறவாம்.
இவ்வாறு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன், தெரிவித்துள்ளார் .

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.