செங்கோட்டையில் கனிமவள கடத்தலை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்
1 min readAIADMK protest against mineral smuggling in Red Fort.
27.5.2023
தென்காசி மாவட்டத்திலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக ராட்சத வாகனங்களில் கனிம வளங்கள் கேரளாவிற்கு கடத்தப்படுவதை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் அதிமுக ஜெ. பேரவை செயலாளர் சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவருமான ஆர் பி உதயகுமார் தலைமையில் தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான செ கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.செல்வ மோகன்தாஸ்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக துணைச் செயலாளர் பொய்கை சோ மாரியப்பன் அனைவரையும் வரவேற்று பேசினார்
அதனைத் தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கனிம வள கடத்தலை கண்டித்தும் திமுக அரசை கண்டித்தும் கோஷமிட்டனர். அதனைத் தொடர்ந்து அதிமுக மகளிரணி துணை செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி எம் ராஜலட்சுமி திருநெல்வேலி மாவட்ட கழக செயலாளர் தச்சை கணேசராஜா அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி ஜி ராஜேந்திரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தெற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளருமான கே ஆர் பி பிரபாகரன், தென்காசி தெற்கு மாவட்ட அவைத்தலைவர் இலஞ்சி எஸ்.கே.சண்முகசுந்தரம், நீக்கனல் லெட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்
உதயகுமார்
அதனைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர்ஆர் பி உதயகுமார் தலைமை உரையாற்றினார் அப்போது அவர் பேசியதாவது;-
திமுக ஆட்சியில் தமிழகம் கொள்ளை போகிறது . தென்காசி திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக ராட்சத வாகனங்களில் கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்படுகின்றன. அதனைக் கண்டித்து கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் செ.கிருஷ்ண முரளி (எ) குட்டியப்பா தமிழக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
ஆனாலும் தொடர்ந்து கனிமவளக் கொள்ளை நடைபெறுவதால் தமிழக கேரள எல்லையான புளியரை சோதனை சாவடி முன்பு இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை மிகப் பிரம்மாண்டமாக நடத்திட வேண்டுமென அதிமுக மாவட்ட செயலாளர்கள் செ.கிருஷ்ண முரளி எம்எல்ஏ மற்றும் எஸ்.செல்வ மோகன்தாஸ் பாண்டியன் ஆகியோர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி யிடம் அனுமதி பெற்றனர். ஆனால் தமிழக காவல்துறை புளியரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுத்துவிட்டது.
இதன் மூலம் அண்ணா திமுகவுக்கு நீங்கள் கடிவாளம் போட்டு தடுக்க முடியாது என்று காவல்துறைக்கு தெரிவித்து கொள்கிறேன். ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் அமைச்சராக இருந்த ராஜா செந்தூர்பாண்டியன் வழித்தோன்றல் செ கிருஷ்ணமுரளி, மற்றும் செல்வமோகன்தாஸ் பாண்டியன் உள்ளிட்டோர் முன் வைத்த காலை பின் வைக்க மாட்டார்கள் அதனால் ஏதோ வந்தார்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு சென்றார்கள் என்று சும்மா இருக்க மாட்டார்கள்.
தமிழகத்தில் இருந்து கடத்தப்படும் கனிமவளங்களை முற்றிலும் பாதுகாக்க எந்த அளவுக்கும் போராடுவார்கள் என்று தெரிவித்து கொள்கிறேன். இந்த வேகாத வெயிலில் சுமார் 5000 பேர் திரண்டு இங்கு வந்து ஏன் போராட வேண்டும் என்று நினைக்கிறீர்களா கேரளாவில் குவாரிகள் உள்ளது அங்கு இருந்து எடுக்காமல் இங்கு வந்து எடுப்பது எதை காட்டுகிறது என்றால் திமுகவினரிடம் பணம் கொடுத்தால் எதை வேண்டுமானாலும் கொடுத்து விடுவார்கள் ஆளுங்கட்சி அமைச்சர் அதாவது ஆட்சி அமைந்த உடன் 11.10 க்கு கொள்ளை அடிக்கலாம் என்று கூறிய செந்தில்பாலாஜி வீட்டில் வருமானவரி சோதனை நடந்து வருவது இவர்களின் ஆட்சியின் லட்சணம் தெரிகிறது,
இயற்கை வளத்தை பாதுகாத்திட இளைஞர்கள் மாணவர்கள் இயற்கை வள ஆர்வல்ர்கள் அண்ணா திமுக உடன் இணைந்து போராட வேண்டும்..போலீசார் புளியரையில் அதற்கு அனுமதி மறுத்தால் செங்கோட்டையில் போராட்டம் நடைபெறுகிறது. தேவைப்பட்டால் டெல்லி செங்கோட்டையிலும் போராட்டம் நடத்துவோம். 100 வண்டி முதல் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நாள்தோறும் கேரளா செல்கிறது ஒரு வாகனத்திற்கு ரூ 92,000 அபராதம் விதித்தால் 60 கோடி வரை அபராதம் விதிக்கலாம் அந்த அளவுக்கு கொள்ளை போகிறது
சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் மற்றும் அதிமுகசட்டமன்ற உறுப்பினர்கள் இந்த கொள்ளைக்கு எதிராக பேசுகிறார்கள் என்றால் இந்த விஷயத்தின் முக்கியத்துவத்தை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் தமிழக அரசு பாராமுகமாக இருந்து வருகிறது என்றால் இவர்களுக்கு எவ்வளவு வருமானம் என்று பாருங்கள்.
செல்வமோகன்தாஸ் பாண்டியன் கூறியது போல் கனிமவள கொள்ளை என்பது தாய்ப்பாலை விற்பதற்கு சமம் என்றார் ஆனால் இவர்கள் விற்கவில்லை தாய்ப்பாலில் விஷப்பாலை கலக்கும் கொடுமை தான் நடைபெற்று வருகிறது
வெடி விபத்தில் இறந்தால் 2 லட்சம் வெள்ளத்தில் இறந்தால் 4 லட்சம் சாராயம் குடித்து இறந்தால் 10 லட்சம்
அரசு நிவாரணம் கொடுப்பது எல்லோரையும் கள்ளசாராயம் குடிக்க சொல்கிறதா இந்த அரசு என்று சந்தேகிக்க தோன்றுகிறது.
தமிழக அரசு உடனடியாக இந்த கனிம வள கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் தவறினால் அதிமுக தொடர்ந்து போராடி இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும் இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில அமைப்பு செயலாளர் பி ஜி ராஜேந்திரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே ஆர் பி பிரபாகரன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மதுரை சரவணன் , கழக நிர்வாகிகள் சண்முகசுந்தரம் சண்முகப்ரியா வீரபாண்டியன் சாமிநாத பாண்டியன் மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் முனைவர் சிவஆனந்த் அண்ணா தொழிற்சங்க மண்டல முன்னாள் செயலாளர் கந்தசாமி பாண்டியன் மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் இலஞ்சி காத்தவராயன் கண்ணன் (எ) ராஜீ, சந்திரகலா, தளபதி பிரேம்குமார் ,குத்தாலிங்கம், கிருஷ்ணசாமி, சிவசீத்தாராம், அதிமுக
ஒன்றிய செயலாளர்கள் எஸ் ஆர் ராமசந்திரன், ஆய்க்குடி கே செல்லப்பன், ஜெயகுமார் துரைபாண்டியன்,சங்கரபாண்டியன், ரமேஷ், வேல்முருகன், செல்வராஜ், வாசுதேவன், அமல்ராஜ், இருளப்பன், என் எச் எம் பாண்டியன், அருவேல்ராஜன், முருகேசன், பாலகிருஷ்ணன், நகர செயலாளர்கள் கணேசன், தென்காசி வே.சுடலை, எம் கே முருகன், ஆறுமுகம், சக்திவேல் பரமேஸ்வரபாண்டியன் பேரூர் செயலாளர்கள் டாக்டர் சுசீகரன் கணேஷ் தாமோதரன் சுப்பிரமணியன் முத்துராஜ் வில்சன் சேவகபாண்டியன் கார்த்திக்ரவி நல்லமுத்து அலியார் முத்துகுட்டி சங்கர் பொதுக்குழு உறுப்பினர் கசமுத்து எல் ஐ சி முருகையா அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் ராமையா பொருளாளர் ஆத்மாநாதன் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் ஞானராஜ், ஜாஹீர் உசேன், தனபால், வடகரை ஜாஹீர் உசேன், எம்.வி. குணம், சேர்மபாண்டி, மாரிமுத்து, முருகன், உள்ளாட்சி பிரதிநிதிகள் சுரேஷ் லிகோரி சங்கரநாராயணன் சத்யகலா சரவணன் ஜனதா காமராஜ் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் செல்வகுமார் தர்மசீலன் சங்கர் தலஜெகன் கனி கழக பேச்சாளர்கள் ராமசுப்பிரமணியன் கோவை புகாரி சங்கை கணபதி இணையத்துல்லா மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஜெரால்டு, மாவட்ட பாசறை செயலாளர் முத்துப்பாண்டி, தென்மண்டல தொழில்நுட்ப பிரிவு செயலாளர் விக்னேஷ், பகுதி செயலாளர் சண்முககுமார், வட்டச் செயலாளர்கள் ,.நவீன், ஜெகநாதன், மற்றும் செங்கோட்டை குருசாமி தாழை மீரான், டால் சரவணன்செட்டியார் ராமசந்திரன், மாவட்ட நகர, ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள், முன்னாள் நகர்மன்ற உறுப்பினா்கள், இந்நாள் நகர்மன்ற உறுப்பினா்கள் வார்டு கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா். ஆர்ப்பாட்டத்தில் சட்டவிரோதமாக கேரளாவுக்கு கடத்தப்படும் கனிமவளங்களை தடுத்து நிறுத்தக்கோரி கண்டன கோஷங்கள் எழுப்பபட்டது. முடிவில் தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக பொருளாளா் சண்முகையா நன்றி கூறினார்