கீழப்பாவூர் பேரூராட்சியில் ரூ.1 கோடியில் சாலைப்பணிகள் தொடக்கம்
1 min readRoad works started in Geezapavur municipality at a cost of Rs.1 crore
27.5.2025
தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் பேரூராட்சியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணியினை தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார்.
கீழப்பாவூர் பேரூராட்சியில், தமிழ்நாடு நகர்புற சாலை கட்டமைப்பு திட்டம் 2022-23 திட்டத்தின் கீழ் ரூ.1.00 கோடி மதிப்பீட்டில் சுரண்டை ரோடு வாய்க்கால் பாலம் முதல் பெரியகுளம் கரை, வடக்கு சிவகாமிபுரம் நாடார் தெரு, வணிகர் கீழத்தெரு மற்றும் 2ம்நம்பர் ரோடு ஆகிய பகுதிகளில் பழுதடைந்த தார்சாலையினை மேம்பாடு செய்தல் பணி தொடக்க விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற தலைவர் பி.எம்.எஸ்.ராஜன் தலைமை வகித்தார். கீழப்பாவூர் பேரூராட்சி செயல்அலுவலர் ஜா.மாணிக்கராஜ், துணைத்தலைவர் கி.ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் பணியினை தொடங்கி வைத்து பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் கீழப்பாவூர் பேரூர் திமுக செயலாளர் ஜெகதீசன், கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் செல்வன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் செ.கோடீஸ்வரன், மு.மாலதிமுருகேசன், கு.ஜெயசித்ரா குத்தாலிங்கம், க.இசக்கிராஜ், ரா.விஜிராஜன், மா.இசக்கிமுத்து, தா.தேவஅன்பு, ஜெ.முத்துசெல்வி ஜெகதீசன், ம.சாமுவேல்துரைராஜ், சீ.பொன்செல்வன், அரசு ஒப்பந்ததாரர் சண்முகவேல் மற்றும் திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் ராஜாமணி, தெய்வேந்திரன், அறிவழகன், கணேசன், சுப்பிரமணியன், எஸ்.ஆர்.பால்துரை, ராமரத்தினசாமி, குத்தாலிங்கம், மாடசாமி, வெற்றி,மாரியப்பன், மதியழகன், தமிழ்செல்வன், வே.மாரியப்பன் சாமிராஜ், இசக்கிமணி, கல்யாணசுந்தரம், மாரிச்செல்வம், ஆ.சிவன், மாரிச்செல்வன், ஆ.சுப்பிரமணியன், முருகன், பெரியசாமி, தங்கபழம், ராமசாமி, ராமகிருஷ்ணன், காலசாமி, துரை, ராம்குமார், பூங்குன்றன், மாயாண்டி, திருவம்பலம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.