கடையம் வட்டாரத்தில் வேளாண்மை கூடுதல் இயக்குனர் கள ஆய்வு
1 min readField survey by Additional Director of Agriculture in Kadayam aria
27.5.2023
பொட்டல்புதூர் கிராமத்தில் தமிழ்நாடு விளை நிலங்களில் நீடித்த பசுமை போர்வை இயக்கம் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட இலவச மரக்கன்றுகளை ஆய்வு செய்தார். ஆய்வின் போது தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்மலர், பஞ்சாயத்து செயலர் ராமர் கனி மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். கடையம்: கடையம் வட்டாரத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட பணிகளை ஸ்டாமின் இயக்குனரும், வேளாண்மை துறையின் கூடுதல் இயக்குனருமான சங்கரலிங்கம் கள ஆய்வு மேற்கொண்டார்.
இதில் 2023-2024-ம் ஆண்டு கலைஞர் திட்ட கிராமங்களான அணைந்த பெருமாள்நாடானூர், தெற்குமடத்தூர், துப்பாக்குடி, முதலியார்பட்டி, திருமலையப்ப புரம் ஊராட்சி பகுதிகளில் தரிசு நில தொகுப்பு திடல் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் உள்ளதா என்பதையும், விரிவான திட்ட அறிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
முன்னதாக பொட்டல்புதூர் கிராமத்தில் தமிழ்நாடு விளை நிலங்களில் நீடித்த பசுமை போர்வை இயக்கம் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட இலவச மரக்கன்றுகளை ஆய்வு செய்தார். ஆய்வின் போது தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்மலர், கலெக்டரின் நேர்முக உதவியாளரும், வேளாண்மை துணை இயக்குனருமான கனகம்மாள் ஆகியோர் உடனிருந்தனர். மேலும் களஆய்வில் கடையம் வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சலின் பொன்ராணி, தோட்டக்கலை உதவி இயக்குனர் கோபி கிருஷ்ணன், வேளாண்மை அலுவலர் அபிராமி, துணை வேளாண்மை அலுவலர் சுப்புராம், உதவி விதை அலுவலர் மாரியப்பன், வேளாண்மை உதவி அலுவலர்கள் கமல்ராஜன், கிருஷ்ணமூர்த்தி, பேச்சியப்பன், பால்துரை, தீபா, தோட்டக்கலை உதவி அலுவலர்கள் கோவிந்தராஜன், திருமலை குமார், இசக்கியம்மாள்,அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் நாகராஜன், அணைந்த பெருமாள் நாடனூர், துப்பாக்குடி-கிராம நிர்வாக அலுவலர் நடராஜன், பஞ்சாயத்து செயலர் ராமர் கனி மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.