சுதந்திர போராட்டத்தில் பழங்குடியினர் பங்களிப்பை நினைவுகூறும் 10 புதிய அருங்காட்சியகங்கள்- மோடி பேச்சு
1 min read10 New Museums to Commemorate Tribal Contribution in Freedom Struggle – PM Modi Speech at Man-Ki-Baad
28.5.2023
இந்தியாவில் நமது கடந்த காலத்தை வெளிப்படுத்தும் பல அருங்காட்சியகங்கள் உள்ளன. சுதந்திர போராட்டத்தில் பழங்குடியினர் பங்களிப்பை நினைவுகூறும் வகையில் 10 புதிய அருங்காட்சியகங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
மன் கி பாத்
பிரதமர் மோடி, ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். இன்று 101-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி உரையாடினார். அவர் பேசியதாவது:-
இன்றைய மன் கி பாத் நிகழ்ச்சி அதன் இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தை குறிக்கிறது. கடந்த மாதம் நாடு முழுவதும் ஒன்று கூடினர். இது ஒளிபரப்பப்பட்டபோது உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான மக்கள் வெவ்வேறு நேரத்தில் இருந்தாலும் அதை கேட்டனர். இந்தியாவின் பலம் அதன் பன்முகத்தன்மையில் உள்ளது.
நாட்டின் பன்முகத்தன்மையை மேம்படுத்துவதற்கும், மக்களுடன் மக்கள் தொடர்பு கொள்வதற்கும் கல்வி அமைச்சகத்தின் இளைஞர் பரிமாற்ற திட்டமான யங் பூங்கம் ஒரு சிறந்த முயற்சி ஆகும். இந்த திட்டம் நாட்டின் ஒரு பகுதியை சேர்ந்த மாணவர்கள் மற்ற பகுதிகளுக்கு சென்று அங்குள்ள கலாச்சாரம், பாரம்பரியத்தை புரிந்து கொள்ளும் வாய்ப்பு வழங்குகிறது.
இந்த முன்முயற்சியின் நோக்கம் மக்களிடையேயான தொடர்பை ஊக்குவிப்பதாகும். இந்த திட்டத்தில் முதல் கட்டமாக 22 மாநிலங்களுக்கு சுமார் 1200 மாணவர்கள் வருகை தந்துள்ளனர்.
மாபெரும் சுதந்திர போராட்ட வீரர் வீர் சாவர்க்கரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவரது தியாகம், தைரியம், உறுதிப்பாடு இன்றும் நம் அனைவரையும் ஊக்குவிக்கிறது. அவரது அச்சமற்ற சுய மரியாதை குணத்தால் அடிமை மனப்பான்மையை சகித்து கொள்ள முடியவில்லை. சுதந்திர இயக்கத்தில் மட்டு மல்ல, சமூக சமத்துவம் மற்றும் சமூக நீதிக்காக வீர் சாவர்க்கர் என்ன செய்தார் என்று இன்று நினைவு கூறப்படுகிறது.
அருங்காட்சியகம்
சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் சர்வதேச அருங்காட்சியக கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தியாவில் நமது கடந்த காலத்தை வெளிப்படுத்தும் பல அருங்காட்சியகங்கள் உள்ளன. குருகிராமில் மியூசியோ கேமரா என்ற தனித்துவமான அருங்காட்சியம் உள்ளது. 1860-ம் ஆண்டுக்கு முந்தைய 8 ஆயிரம் கேமராக்களின் தொகுப்பு உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அருங்காட்சியம் தெய்வீகத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் அருங்காட்சியகம் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்களை கொண்டு உள்ளது. சுதந்திர போராட்டத்தில் பழங்குடியினர் பங்களிப்பை நினைவுகூறும் வகையில் 10 புதிய அருங்காட்சியகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இவ்வாறு மோடி பேசினார்.