வல்லம் நூலகர் பணிநிறைவு பாராட்டுவிழா
1 min readVallam librarian graduation ceremony
1.6.2023
தென்காசி மாவட்டம் வல்லம் கிளை நூலகர் எல்சிதங்கபாய் பணிநிறைவு பாராட்டுவிழா மாவட்ட நூலக ஆய்வாளர் கணேசன் தலைமையில் நடைபெற்றது.
நூலகர்
தென்காசி வட்டார நூலகர் சூ.பிரமநாயகம் வரவேற்றார்.
.பொது நூலகத்துறை அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் முத்துராமலிங்கம் அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட இணைச் செயலாளர் முத்துபாண்டியன், கடையம் நூலகர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தென்காசி ஊதிய மையம் சார்பாக தங்ககாசு, கேடயம், சால்வை வழங்கி கௌரவப்படுத்தப்பட்டது.
பொது நூலகத்துறை அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் வெற்றிவேலன், மாவட்ட செயலாளர் குமார், நூலகர்கள் ஜீலியா ராஜசெல்வி, கயல்விழி, ராமசாமி, பரமசிவன், நாகராஜ், நிஹ்மத்துன்னிஸா, ரவிச்சந்திரன், பரமேஸ்வரி, கிறிஸ்டிபாய், வீரக்குமார், ஐனஸ், பாலசுப்பிரமணியன், இளங்கோ, அம்பிகாவதி, மாரியப்பன் மற்றும் செங்கோட்டை வாசகர் வட்ட கருத்தபாண்டி, செண்பககுற்றாலம், செங்கோட்டை மேலூர் ஆதிமூலம், தமிழ் ஆசிரியர் சிவக்குமார், கனராவங்கி முதுநிலை மேலாளர் நரேந்திரதேவா, அருண், விஜயராணி வாழ்த்துரை வழங்கினர்.பணிநிறைவு பெற்றுள்ள எல்சிதங்கபாய் ஏற்புரை ஆற்றினார். தென்காசி கிளை நூலகர் ஜெ.சுந்தர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.