சிறுபான்மை ஆணையத்தின் கீழ் தென்காசியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
1 min readWelfare Scheme Assistance Ceremony in Tenkasi under Minority Commission
1.6.2023
தென்காசி மாவட்டத்தில் சிறுபான்மை ஆணையத்தின் கீழ் இயங்கும் தென்காசி முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது இந்த விழாவில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன், மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் சா.பீட்டர் அல்போன்ஸ் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் 107 பெண்களுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்களும், 16 பெண்களுக்கு மாவு ஆட்டும் இயந்திரங்களும், 14 மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையும், 11 பெண்களுக்கு குடிசை தொழில் துவங்க உதவிகள் உதவியும் வழங்கப்பட்டது அதன்படி மொத்தம் 13 லட்சத்து 54 ஆயிரத்து 200 ரூபாய் மதிப்பில் 149 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மேலும் தென்காசி மாவட்டத்தில் தமிழ் வழி கல்வியில் முதல் அதிக மதிப்பெண்கள் பெற்ற நான்கு மாணவர்களுக்கு கடையநல்லூர் சப்ரின் இமான 590 ,செங்கோட்டை கலைச்செல்வி 583, சங்கரன்கோவில் முத்துலட்சுமி 583, தென்காசி கார்த்திகா 582, ஆகியோர்களுக்கு பரிசுகளையும் வழங்கி பாராட்டினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பழனி நாடார், தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன், தென்காசி மாவட்ட ஊராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி போஸ், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் ஆயிரப்பேரி தி.உதய கிருஷ்ணன், தென்காசி நகர் மன்ற தலைவர் ஆர்.சாதிர், தென்காசி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வல்லம் மு.ஷேக்அப்துல்லா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் சங்கர நாராயணன், தென்காசி மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன், வடகரை பேரூராட்சி தலைவர் ஷேக் தாவுது, கௌரவச் செயலாளர் முகமது சலீம், தென்காசி மீரான் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் அப்துல் அஜீஸ், டாக்டர் அமீர்கான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.