June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

தேசிய கல்வி நிறுவன தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம்

1 min read

IIT Chennai has topped the National Institute Rankings

5.6.2023
தேசிய கல்வி நிறுவன தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பெற்றுள்ளது.

கல்வி நிலையங்கள்

கல்வி மற்றும் வெளியுறவுத் துறை இணை மந்திரி ராஜ்குமார் ரஞ்சன் சிங் இன்று தலைசிறந்த கல்வி நிலையங்கள் தரவரிசை பட்டியலை வெளியிட்டார். மத்திய அரசு வெளியிட்ட தலைசிறந்த கல்வி நிலையங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தது சென்னை ஐஐடி.தேசிய தர வரிசையில் 5வது முறையாக சென்னை ஐஐடி முதலிடம் பிடித்து உள்ளது.
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் (IISc) பெங்களூரு தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் (NIRF) தரவரிசை 2022 இல் ஆராய்ச்சி மற்றும் பல்கலைக்கழகங்கள் பிரிவின் கீழ் முதல் இடத்தைப் பிடித்தது.

டாப் 100இல் தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 கல்வி நிலையங்கள் இடம்பெற்று உள்ளன. அண்ணா பல்கலைக்கழகம் 16 வது இடத்திலும்,கோவை பாரதியார் பல்கலைக்கழகம் 24 வது இடத்திலும் உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *