June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

திப்பணம்பட்டி நூலகத்தில் ஆங்கில பயிற்சி வகுப்பு

1 min read

English Training Class at Thippanapatti Library

5.6.2023
மாணவ, மாணவியருக்கு தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் திப்பணம்பட்டி கிளை நூலகத்தில் ஆங்கில பயிற்சி வகுப்பு ஒரு மாதம் நடைபெற்றது

ஆங்கில பயிற்சி

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டி கிளை நூலகத்தில், பாரதியார் வாசகர் வட்டம் சார்பில் கோடை விடுமுறையையொட்டி, மாணவ, மாணவியருக்கு ஆங்கில பயிற்சி வகுப்பு ஒரு மாதம் நடத்தப்பட்டது. 35 மாணவ, மாணவியர் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.. வகுப்பின் இறுதி நாளில் அடிப்படை ஆங்கிலத் தேர்வு நடத்தப்பட்டன. இதில் முதல் 5 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகளும், பங்கேற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.
பயிற்சி நிறைவு விழா நிகழ்ச்சிக்கு மதனகோபால் தலைமை வகித்தார். நூலகர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். வாசகர் வட்ட செயலர் தங்கராஜ் வரவேற்றார். ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் பாண்டியராஜா, வாசகர் வட்ட நிர்வாகிகள் முத்துக்குட்டி, சசிகுமார், பிரபாகர்,சேர்மன்,கார்த்திகை ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் சந்துரு அனைவருக்கும் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நூலக உதவியாளர் கனகராஜ் செய்திருந்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *