September 16, 2024

Seithi Saral

Tamil News Channel

கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியது

1 min read

Kanyakumari is absorbed by the sea

17.6.2023

கன்னியாகுமரி கடல் திடீரென்று உள்வாங்கியது. இதனால் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து 1 மணி நேரம்

தாமதமாக தொடங்கப்பட்டது.

கடல் உள்வாங்கியது

அமாவாசை தினம் என்பதால் கன்னியாகுமரியில் ஒரு புறம் கடல் சீற்றமாகவும், கொந்தளிப்பாகவும் காணப்பட்டது.இன்னொரு புறம் கடல் உள்வாங்கி காணப்படுகிறது.

இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள வங்க கடல் பகுதி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது.
அதே வேளையில் இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக் கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடனும் சீற்றமாகவும் காணப்பட்டது.

இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை. இதற்கிடையில் காலை 9 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது.

இதைத்தொடர்ந்து 1 மணி நேரம் தாமதமாக காலை 9 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. அதன்பிறகு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று ஆர்வமுடன் பார்த்து வந்தனர்.

கன்னியாகுமரி முக்கடல் சங்கத்தில் கடல்சீற்றம் காரணமாக சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க சுற்றுலா போலீசார் தடை விதித்தனர். மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி ஆக்ரோஷமாக வீசின. இத னால் இந்த கடற்கரை கிரா மங்களில் பெரும்பாலான கட்டுமரம் மற்றும் வள்ளம் மீனவர்கள்கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.