புளியங்குடியில் வியாபாரி திடீர் சாவு
1 min read
Sudden death of a trader in Buliangudi
17.6.2023
புளியங்குடியில் வியாபாரி திடீரென இறந்தார்.
வியாபாரி
புளியங்குடி வல்லப விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன்(வயது 45). இவர் காய்கறி வியாபாரம் பார்த்து வந்தார். தினமும் மாலையில் தனது நண்பர்களுடன் சேர்ந்து புளியங்குடி ஊருக்கு வெளியே ஒருவரது கிணற்றில் அமர்ந்து பேசுவது வழக்கம். நேற்றும் அவர் தனது நண்பர்களுடன் இரவில் பேசிக்கொண்டிருந்த நிலையில் அனைவரும் கிணற்று ஓரத்திலேயே தூங்கி விட்டனர்.
இந்நிலையில் இன்று காலை அவரது சக நண்பர்கள் எழுந்துவிட்ட நிலையில், மாரியப்பன் மட்டும் எழுந்திருக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் பார்த்தபோது அவர் இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர்கள் தெரிவித்த புகாரின்பேரில் புளியங்குடி போலீசார் அங்கு சென்று மாரியப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாகவழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.