June 17, 2024

Seithi Saral

Tamil News Channel

வேறுபாடுகளை களைந்து நாட்டுக்காக ஒன்றிணைகிறோம் – அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை

1 min read

Let’s get rid of our differences and unite for the country – PM Modi’s speech in the US Parliament

23.6.2023
அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுவது எப்போதுமே ஒரு பெருமையாக கருதுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். கூட்டாண்மை என்பது வரலாற்றில் எந்த நேரத்திலும் வலுவான, நெருக்கமான மற்றும் மிகவும் ஆற்றல் வாய்ந்ததாக இருக்கும் என்றும் உலகின் மிக முக்கியமான ஒன்றாகும் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து கூட்டாக செய்தி அறிக்கையை வெளியிட்டார்.
வெள்ளை மாளிகையில் இருநாட்டு தலைவர்களும் செய்தியாளர்களை சந்தித்தபோது பிரதமர் மோடி “இந்தியாவில் சாதி, மதம் அடிப்படையிலான பாகுபாடு என்ற பேச்சுக்கு இடமில்லை இயற்கையை சுரண்ட விரும்பவில்லை; சுற்றுச்சூழல் மட்டுமின்றி உலகை பாதுகாக்க பாடுபடுகிறோம்” என்று கூறினார்.

விருந்து

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அரசு விருந்தில் போது பிரதமர் மோடி பேசியதாவது:- இன்றைய இந்த அற்புதமான இரவு விருந்து அளித்தற்க்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எனது வருகையை வெற்றிகரமாக கவனித்துக்கொண்டதற்காக முதல் பெண்மணி ஜில் பைடனுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஒவ்வொரு நாளும், இந்தியர்களும், அமெரிக்கர்களும் ஒருவரையொருவர் நன்கு அறிந்து கொள்கிறார்கள்… இந்தியாவில் குழந்தைகள் ஹாலோவீனில் ஸ்பைடர்மேன் ஆகின்றனர், அமெரிக்காவின் இளைஞர்கள் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனமாடுகிறார்கள். இந்திய அமெரிக்கர்கள் அமெரிக்காவில் நீண்ட தூரம் வந்துள்ளனர். அமெரிக்காவின் உள்ளடங்கிய சமூகம் மற்றும் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்துவதில் இந்திய அமெரிக்கர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர். கிரிக்கெட்டிலும் அமெரிக்காவில் பிரபலமாகி வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற அமெரிக்க அணி தங்களால் இயன்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அவர்கள் வெற்றி பெற நான் வாழ்த்துகிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.