பிரதமர் மோடி கெய்ரோ சென்றடைந்தார்- விமான நிலையத்தில் வரவேற்பு
1 min readPM Modi arrives in Cairo- airport welcome
24.6.2023
பிரதமர் மோடி 5 நாள் அரசுமுறை பயணமாக அமெரிக்கா, எகிப்துக்கு புறப்பட்டுச் சென்றார். கெய்ரோ விமான நிலையத்தில் அவரருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.
மோடி
பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசுமுறை பயணமாக கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர் சர்வதேச யோகா தினம் சிறப்பு நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அமெரிக்கா பாராளுமன்றத்திலும் சிறப்புரை ஆற்றினார். இதற்கிடையே, அமெரிக்காவில் தனது பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி 2 நாள் பயணமாக எகிப்து புறப்பட்டுச் சென்றார்.
எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு சென்றடைந்தார் பிரதமர் மோடி. விமான நிலையத்தில் எகிப்து பிரதமர் முஸ்தபா மாட்போலி உற்சாகமாக வரவேற்றார். எகிப்து நாட்டிற்கு முதல் முறையாக பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.