புதிதாக 5 வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
1 min readPrime Minister Modi launched the new 5 Vande Bharat Rail service
27.6.2023
புதிதாக ஐந்து வந்தே பாரத் ரெயில்களை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இவைகளையும் சேர்த்து நாட்டில் இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில்களின் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளது.
வந்தே பாரத்
அமெரிக்கா மற்றும் எகிப்து நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் சென்று நாடு திரும்பிய பிரதமர் மோடி இன்று மத்திய பிரதேச மாநிலம் போபால் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டார். போபால் வந்தடைந்த பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து போபாலில் உள்ள ராணி கம்லாபதி ரெயில் நிலையத்தில் இருந்து ஐந்து வந்தே பாரத் ரெயில்களை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கோவா- மும்பை, பாட்னா- ராஞ்சி, போபால்- இந்தூர், போபால்-ஜபல்பூர், பெங்களூரு-ஹூப்ளி ஆகிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கியுள்ளது. இதன் மூலம் நாட்டில் இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில்களின் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி போபாலில் இருந்து 3,000க்கும் மேற்பட்ட பாஜக பூத் ஊழியர்களுடன் காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார்.