பொது சிவில் சட்டம் எவ்வாறு தவறாகும்? – எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி கேள்வி
1 min readHow can common civil law be wrong? PM Modi’s question to opposition parties
27/6/2023
பொது சிவில் சட்டம் எவ்வாறு தவறாகும்? என்று பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளுக்கு கேள்வி விடுத்துள்ளார்.
பொதுசிவில் சட்டம்
பிரதமர் நரேந்திர மோடி, இன்று மத்தியபிரதேச மாநிலத்தில் 5 வந்தே பாரத் ரெயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்பு, நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் கட்சித் தொண்டர்களிடம் உரையாற்றினார். பின்னர் கேள்வி-பதில் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை பல முறை சாடினார். அப்போது பொது சிவில் சட்டம் (UCC) மற்றும் முத்தலாக் விவகாரத்தில், முஸ்லிம்களை தூண்டிவிட்டு தவறாக வழி நடத்துவதாக எதிர்க்கட்சிகளை கடுமையாக தாக்கினார்.
“பொது சிவில் சட்டம் என்ற பெயரில் மக்களை தூண்டி விடுகின்றனர். ஒரு நாடு எவ்வாறு இரண்டு சட்டங்களால் இயங்க முடியும்? அரசியல் சாசனம், பொது சிவில் சட்டத்தை குறித்தும், சம உரிமை குறித்தும் பேசுகிறது. உச்ச நீதிமன்றமும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், இவர்கள் (எதிர்க்கட்சிகள்) பொது சிவில் சட்டத்திற்கெதிராக வாக்குவங்கி அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்” என்றார் மோடி. பிரதமர்
இவ்வாறு பேசியிருப்பதன் மூலம், வரவிருக்கும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் பொது சிவில் சட்ட மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யலாம் என்ற கருத்து உருவாகி வருகிறது. 22வது சட்ட கமிஷன், ஜூன் 14 அன்று, இந்த பொது சிவில் சட்டம் தொடர்பான வரைவு மசோதா குறித்து மக்கள் தங்கள் கருத்துக்களையும், பரிந்துரைகளையும், 30 நாட்களுக்குள் தெரிவிக்குமாறு கேட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.