May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

வாசுதேவநல்லூர் அருகே கல்குவாரியை மூடக்கோரி கிராம மக்கள் போராட்டம்

1 min read

Villagers are protesting near Vasudevanallur to close the Kalquari

27.6.2023
வாசுதேவநல்லூர் அருகே கல்குவாரியை மூடக்கோரி கிராம மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

கல்குவாரி

தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூர் அருகே உள்ள அரியூர் மலையடி வாரத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரியினால் நீரோடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் மலையில் பெய்யும் மழை நீரானது குளங்களுக்கு செல்லாமல் தடுக்கப்பட்டு குளங்கள் அனைத்தும் வறண்ட நிலையில் காணப்படுபதால், ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்படைந்து வருகிறது. எனவே மலையை சுற்றியுள்ள 5 கிராம மக்களின் வாழ்வா தாரம் கேள்விக்குறியாகி கால்நடைகளை கூட மேய்ச்சலுக்காக கொண்டு செல்ல முடியாத நிலை அவலநிலை ஏற்பட்டுள்ளது என அப்பகுதியினர் புகார் தெரிவித்து வந்தனர்.
இதுதொடர்பாக இருமன்குளம், வடக்குப் புதூர், வீரிருப்பு உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் பல முறை மாவட்ட கலெக்டர், அனைத்துதுறை சார்ந்த அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மருத உடைய அய்யனார் கோவிலில் அமர்ந்து உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்திய போது வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 2 டி.எஸ்.பி.க்கள் உட்பட 300-க்கும் மேற்பட்ட போலீ சார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சங்கரன்கோவில் தாசில்தார் பழனிவேல்சாமி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட வர்க ளிடம் கல்குவாரி சம்பந்தமான கோரிக்கை மாவட்ட கலெக்டர் மூலமாக விசாரணை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்ததைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மலையை பார்வையிட சென்ற போதுதான் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவாளர்களுக்கும், கல்குவாரியில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டதால் கல்குவாரியில் பணிபுரியும் ஊழியர்களை சீமான் ஆதரவாளர்கள் தாக்கியதாக சீமான் உள்பட 13 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.