கருமடையூர் அங்கன்வாடிக்கு தி.மு.க. சார்பில் உபகரணங்கள்
1 min readDMK to Karumateur Anganwadi. Equipment on behalf of
27/6/2023
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் பேரூராட்சி பகுதியில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி கருமடையூர் அங்கன்வாடிக்கு உபகரணங்களை தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் வழங்கினார்.
நலத்திட்ட உதவிகள்
தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் கருணாநிதியின்நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கீழப்பாவூர் பேரூர் திமுக சார்பில் கருமடையூர் அங்கன்வாடிக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கீழப்பாவூர் பேரூர் செயலாளர் ரெ.ஜெகதீசன் தலைமை வகித்தார். பேரூராட்சி மன்ற தலைவர் பி.எம்.எஸ்.ராஜன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் கா.ராஜாமணி முன்னிலை வகித்தனர். தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.
சிவபத்மநாதன் பங்கேற்று,
அங்கன்வாடிக்கு 25 சேர்கள், டேபிள் ஆகியவனவற்றை வழங்கினார். அதனைத் தொடர்ந்து அங்கன்வாடி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில், கீழப்பாவூர் பேரூர் துணை செயலாளர்கள் அறிவழகன், முருகன், பொருளாளர் தெய்வேந்திரன், ஒன்றிய பிரதிநிதி மலைச்சாமி, மனோகரன்,முன்னாள் மாவட்ட பிரதிநிதி இளையபெருமாள், ஆதிதிராவிடர் அணி பாலசுப்பிரமணியன், கருமடையூர் மாரிச்செல்வம், செல்வராஜ், கணேசன், குத்தாலிங்கம், கவுன்சிலர் இசக்கிமுத்து, ரவிச்சந்திரன், இசக்கிமணி, வார்டு செயலாளர் மாரியப்பன், சாமிராஜ், பாலமுருகன:, இசக்கிமுத்து, முத்துமணி துரைப்பாண்டியன், மாயாண்டி, பூங்குன்றன், சேர்மன், மாவட்ட மாணவரணி துணைஅமைப்பாளர் மாரியப்பன், தொண்டரணி துணை அமைப்பாளர் பொன்மோகன், அருணாபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.