October 4, 2024

Seithi Saral

Tamil News Channel

பொது சிவில் சட்டம் என்றால் என்ன?

1 min read

What is General Civil Law?

28.6.2023
பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொது சிவில் சட்டமானது சிறுபான்மையினரின் உரிமைகளை பாதிக்கும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.
நாட்டில் இந்துக்கள் பெரும்பான்மையாகவும், கிறிஸ்தவா்கள், முஸ்லிம்கள், சீக்கியா்கள், பவுத்தா்கள், சமணா்கள், பார்சி இனத்தவா் ஆகியோர் சிறுபான்மையினராகவும் உள்ளனா். திருமணம், விவாகரத்து, சொத்துப் பகிர்வு உள்ளிட்டவற்றுக்கான சட்டங்கள் இந்துக்கள், கிறிஸ்தவா்கள், முஸ்லிம்கள் ஆகியோருக்குத் தனித்தனியாக உள்ளன. அவ்வாறு சட்டங்கள் தனித்தனியாக இருப்பது நிர்வாகத்தில் பெரும் இடையூறுகளை ஏற்படுத்துவதாக மத்திய அரசு கூறி வருகிறது. மக்களிடையே ஒற்றுமை உணா்வை ஊக்குவிக்கும் நோக்கில் நாட்டில் அனைத்து சமூக மக்களுக்கும் பொதுவான சட்டங்களை வகுக்க அரசுகள் முயற்சிக்க வேண்டுமென அரசமைப்புச் சட்டத்தின் 44-வது பிரிவு வலியுறுத்துகிறது.
அதன் அடிப்படையில், நாட்டில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய பா.ஜ.க. முன்னெடுத்து வருகிறது. கோவா, குஜராத், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும், பொது சிவில் சட்டமானது சிறுபான்மையினரின் உரிமைகளை பாதிக்கும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. அதை பாஜக நிராகரித்து வருகிறது. அடுத்த ஆண்டு பாராளுமன்ற தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், பொது சிவில் சட்ட விவகாரத்தை பா.ஜ.க. முக்கிய ஆயுதமாகக் கையில் எடுத்துள்ளதாக அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா்.

இந்த நிலையில், பொது சிவில் சட்டம் அவசியமானது என பிரதமா் மோடி கூறியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.