சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் முதியவருக்கு 21ஆண்டு சிறை
1 min readOld man jailed for 21 years for raping girl
28.6.2023
இராணிப்பேட்டை அருகே சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் முதியருக்கு 21ஆண்டு சிறை தண்டணை வழங்கி மாவட்ட அமர்வு நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
பாலியல் பலாத்காரம்
இராணிப்பேட்டை மாவட்டம், கலவை அடுத்த மேல்புதுப்பாக்கத்தைச் சேர்ந்த சேர்ந்த பெருமாள்(51) என்பவர் கடத்த டிசம்பர் – 2021ஆம் ஆண்டு அன்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக இராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்ஸோ சட்டத்தின் கீழ் அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது சிறையில் அடைக்கப்பட்டார். அதடைத்தொடர்ந்து வழக்கு விசாரணை வேலூர் போக்ஸோ
நீதிமன்றத்தில் மாவட்ட அமர்வு நீதிபதி கலைப்பொன்னி முன்னிலையில் நடைபெற்று வந்தது
இந்நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டு நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது .தீர்ப்பில் பெருமாளுக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் , 21 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி நீதிபதி கலைப்பொன்னி உத்தரவிட்டார் . இதனையடுத்து முதியவர் பெருமாளைப் போலீஸார் வேலூர் மத்திய சிறையிலடைத்தனர்