சங்கரன்கோவில்: ஆன்லைன் சூதாட்டத்தால் வங்கி ஊழியர் தற்கொலை
1 min readIn Sankaranko: On Online Gambling-Rs. Bank employee who lost 15 lakh committed suicide
29.6.2023
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்குப்புதூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் மாரி ராஜா மகன் மாரிச்செல்வம். (வயது 25). தனியார் வங்கி ஊழியர். மாரிச்செல்வம் கடந்த இரண்டு வருடமாக ஆன்லைன் சூதாட்டத்தில் ரூபாய் 15 லட்சம் இழந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மன வேதனை அடைந்த மாரிச்செல்வம் நேற்று முன்தினம் இரவு வீட்டில் விஷம் குடித்து மயங்கி நிலையில் இருந்தார். மயங்கி நிலையில் இருந்த மாரிச்செல்வம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று மாரிச்செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்ததி வருகின்றனர். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்ட போதிலும் ஆன்லைன் சூதாட்டத்தினால் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் நிலை தொடர்கிறது என்பது வேதனை அளிக்கக் கூடியதாக உள்ளது.