தென்காசி அருகே கல்குவாரி யில் மிரட்டி பணம் பறிக்க முயன்ற 3 போலி நிருபர்கள் கைது
1 min read3 fake reporters were arrested for trying to extort money in Kalquari near Tenkasi
29.6.2023
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள கல்குவாரியில் பணம் கேட்டு மிரட்டிய மதுரை பகுதியை சேர்ந்த 3 போலி பத்திரிகை நிருபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்
மிரட்டல்
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள அரியூரில் பிரேம்குமார் என்பவர் அரசு அனுமதி பெற்று கல்குவாரி நடத்தி வருகிறார். இந்த கல்குவாரிக்கு மதுரை ஏழுமலை பகுதியை சேர்ந்த செல்லமுத்து என்பவரது மகன் வினோத்குமார் (வயது 31), இவர் பி.பி.சி.யின் செய்தியாளர் என்றும், உசிலம்பட்டியை சேர்ந்த பிரபுராஜன் (வயது 38), இவர் மதுரை மாவட்ட தகவல் மற்றும் சட்ட முன்னணியின் மாவட்ட தலைவர் என்றும், உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த காசிராஜன் என்பவரது மகன் சவுந்தரபாண்டி (வயது21), ஆகிய மூவரும் நாங்கள் அனைவரும் பிரபல செய்தியாளர்கள். உங்கள் கல் குவாரி சட்ட விரோதமாய் இயங்குகிறது. அது பற்றிய செய்தியை வெளியிடாமல் இருக்க பணம் கொடுங்கள் என மிரட்டியுள்ளனர்.
இது தொடர்பாக குவாரி ஊழியர்கள் கொடுத்த தகவலையடுத்து அங்கு வந்த புளியங்குடி போலீசார் அவர்கள் மூன்று பேர்களிடமும் விசாரணை நடத்தினர்
விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாக பேசிய அவர்கள் 3 பேர்களும் போலி நிருபர்கள் என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து போலி அடையாள அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.