May 6, 2024

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்ட விளையாட்டு வீரர்களை வழியனுப்பிய மாவட்ட ஆட்சியர்

1 min read

Tenkasi District Sportspersons were sent off by the District Collector

30.6.2023
சென்னையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெறும் மாநில அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை 2022-2023 விளையாட்டு போட்டிகளில் தென்காசி மாவட்டத்திலிருந்து கலந்துகொள்ளும் விளையாட்டு வீரர்களை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் வழியனுப்பி வைத்தார்.

விளையாட்டு வீரர்கள்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் 2022-23ம் ஆண்டிற்கான மாநில
அளவிலான முதலமைச்சர்
கோப்பை விளையாட்டு போட்டிகள் சென்னையில் நடைபெறுகிறது

இதில் தென்காசி மாவட்டத்தை சார்ந்த சுமார் 69 வீரர், வீராங்கனைகள் கலந்து
கொள்கின்றனர்.தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் அவர்கள் செல்லும் பேருந்துகளை தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரனீ
கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட விளையாட்டு அலுவலர் வினு, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி தமிழ்நாடு போக்குவரத்து கழக கிளை மேலாளர் சீனிவாசன் மற்றும் அலுவலர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.