தென்காசி அருகே 2ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி கடத்தல் – பறிமுதல்
1 min read2 thousand kg ration rice smuggled near Tenkasi – seized
30.6.2023
தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தகவல் வந்தது சேர்ந்த மரம் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் கிடைத்தது
காவல்துறை ஆய்வாளர் ராஜா உத்தரவின்படி சேர்ந்தமரம் சார்பு ஆய்வாளர் கருப்பசாமி பாண்டியன் மற்றும் மற்றும் ராமஜெயம் பால்ராஜ் ஆகியோர்
சேர்ந்தமரம் பழைய காவல் நிலையம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது
அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது சரக்கு வாகனத்தில் 45 மூடைகளில் சுமார் 2,000கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்ட வாகனத்தை ஓட்டி வந்த சுந்தரபாண்டிய புரம் மாரப்பபாறை தெருவில் வசித்து வரும் மாசானம் என்பவரின் மகன் சுடலை என்பவரை கைது செய்து சரக்கு வாகனம் மற்றும் அதில் இருந்த ரேஷன் அரிசியையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் விசாரணையில் சங்கரன்கோவில் இருந்து கண்ணன் என்பவர் கீழப்பாவூர் கண்ணன் ரைஸ் மில்லிற்கு அனுப்பி இறக்குமாறு கூறியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்
காவல்துறையினர் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை உணவு கடத்தல் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.