கேரளாவுக்கு கனமழை எச்சரிக்கை-தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்தது
1 min readHeavy rain warning for Kerala-National Disaster Response Team rushed
1.7.2023
கேரளாவில் பல இடங்களில் திங்கட்கிழமை வரை மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக கேரள மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பருவமழை
கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், மற்ற பகுதிகளில் மிதமான அளவிலும் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் கேரளாவில் பல இடங்களில் திங்கட்கிழமை வரை மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்று ஆலப்புழா, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு நாளையும், பத்தனம் திட்டா, ஆலப்புழா, கோட்டையம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு நாளை மறுநாளும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பேரிடல் மீட்பு குழு
கனமழை எச்சரிக்கை காரணமாக கேரள மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் கேரளா விரைந்துள்ளனர். அவர்கள் ஆலப்புழா, இடுக்கி, கோழிக்கோடு, மலப்புரம், திருச்சூர், வயநாடு, பத்தனம்திட்டா ஆகிய பகுதிகளில் முகாமிட்டு தயார் நிலையில் உள்ளனர்.