கடையநல்லூர் மாற்றுக் கட்சி நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர்
1 min read
Kadayanallur Alternative Party functionaries joined AIADMK
3.7.2023
தென்காசி வடக்கு மாவட்டம், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடைகால், துரைச்சாமிபுரம் பகுதிகளைச் சேர்ந்த புதிய தமிழகம் உட்பட பல்வேறு மாற்றுக் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மனோஜ், ராஜு, திரு.சக்திவேல் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள், நேற்று அதிமுகவில் இணைந்தனர்.
தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜா கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா
முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்ட ஆட்டோ ஓட்டுனர்கள் தங்களை அண்ணா தொழிற்சங்க உறுப்பினர்களாக பதிவு செய்துகொண்டனர்.
அதிமுகவில் இணைந்த அனைவருக்கும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் செ.கிருஷ்ண முரளி (எ) குட்டியப்பா கைத்தறி ஆடை அணிவித்து வரவேற்றார்
இந்த நிகழ்ச்சியில் கடையநல்லூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ஜெயக்குமார், ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற இளைஞரணி செயலாளர் செல்லப்பா , கிளை கழக செயலாளர்கள் மணி, ராஜன், சங்கிலி, பத்மநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.