June 20, 2026

Seithi Saral

Tamil News Channel

குற்றாலத்தில் சீசன் களை கட்டியது- அருவிகளில் பொதுமக்கள் உற்சாக குளியல்

1 min read

The season weeded in the court- the public enthusiastic bathing in the waterfalls

3.7.2023
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நேற்று மாலையில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்த நிலையில் இன்று காலை குற்றாலம் மெயின் அருவி ஐந்தருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. குற்றாலம் மெயின் அருவியில் நேற்று இரவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது . பின்னர் இன்று காலையில் தண்ணீர் வரத்து சற்று குறைந்ததும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

குற்றால சீசன்

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் சீசன் துவங்கிவிடும். ஆனால் இந்த ஆண்டு குறிப்பிட்டப்படி சீசன் துவங்கவில்லை. அவ்வப்போது லேசான சாரல் மழை பொழிந்ததால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி யில் சிறிதளவு தண்ணீர் விழுந்தது. பழைய குற்றால அருவியில் தண்ணீர் வரத்து இல்லாமல் இருந்தது.

இந்நிலையில் நேற்று இரவு குற்றாலம் மலைப்பகுதியில் விட்டு விட்டு சாரல் மழை தொடர்ந்தது. குளு குளு தென்றல் காற்றும் வீசி வருகிறது. இன்று காலை 5 மணிக்கு குற்றாலம் மெயின் அருவியில் அபாய வளைவை தாண்டி தண்ணீர் கொட்டியது.
மேலும் குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

ஆனால் காலையில் தண்ணீர் வரத்து சற்று குறைந்ததும் குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் அருவியில் குளித்து மகிழ்ந்தனர் . குற்றாலத் ஐந்தருவி பகுதியில் உள்ள வியாபாரிகளும் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வறண்டு கிடந்த பழைய குற்றாலம் அருவியில் இன்று தண்ணீர் விழ வில்லை. கடையத்தில் இன்று மழை பெய்ததால் நாளை தண்ணீர் விழும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *