போனை பறித்த திருடனுடன் இளம்பெண் காதல்
1 min readA teenage girl falls in love with a phone thief in Brazil
27.7.2023
காதலுக்கு கண் இல்லை என்பார்கள். ஆனால் இப்படியும் காதல் மலருமா? என கேட்கும் வகையில் ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரேசில் நாட்டை சேர்ந்த இமானுவேலா என்ற இளம்பெண் அப்பகுதியில் உள்ள ஒரு தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஒரு வாலிபர் இமானுவேலாவிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் திருடன், திருடன் என கத்தினார். ஆனாலும் கண் இமைக்கும் நேரத்திற்குள் திருடன் தப்பி ஓடி தலைமறைவானார்.
இந்நிலையில் செல்போனை பறித்த வாலிபர் அதை எடுத்து பார்த்த போது, அதில் இமானுவேலாவின் புகைப்படத்தை பார்த்தார். இவ்வளவு அழகான பெண்ணிடம் செல்போனை பறித்துவிட்டோமே என வருந்திய அவர், இமானுவேலாவை நேரில் சந்தித்து அவரிடம் போனை திருப்பி கொடுத்தார்.
காதல்
இதனால் மகிழ்ச்சி அடைந்த இமானுவேலா, திருடனை மன்னித்ததோடு அவருடன் நட்பாக பழக தொடங்கினார். நாளடைவில் இந்த நட்பு காதலாக மாறி உள்ளது. கடந்த 2 வருடங்களாக இருவரும் காதலித்து வருவதாக கூறுகிறார்கள்.
இவர்களது பேட்டி டுவிட்டரில் வைரலாகி 2,200-க்கும் மேற்பட்ட லைக்குகளை குவித்து வருகிறது.
வீடியோவை பார்த்த பயனர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதில் ஒருவர், அன்பால் எதையும் சாதிக்க முடியும் எனவும், மற்றொருவர் இது ஒரு நகைச்சுவை போல் தெரிகிறது, ஆனால் உண்மையானது என பதிவிட்டுள்ளார்.