December 8, 2024

Seithi Saral

Tamil News Channel

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் தேரோட்டம்‘

1 min read

Sankarnarayana Swamy Temple Chariot’

30.7.2023
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் தேரோட்டம் நடந்தது.

சங்கரன்கோவில்

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இங்கு ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் உத்திராடம் நட்சத்திரம் நாளில், தவ மிருக்கும் கோமதி அம்மனுக்கு சிவபெருமான் சங்கர நாராயணராக காட்சி கொடுக்கும் ஆடித்தபசு திருவிழா மிக முக்கிய திருவிழா ஆகும்.
இந்த ஆண்டு ஆடித்தபசு திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலை கோமதி அம்பாள் பல்வேறு அலங்காரங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தொடர்ந்து தினமும் இரவு மண்டகப்படியில் இருந்து வெவ்வேறு வாகனங்களில் கோமதி அம்மன் வீதி உலா நடைபெற்றது.

தேரோட்டம்

விழாவின் 9-ம் நாளான இன்று தேரோட்ட நிகழ்ச்சி நடந்தது. இதை முன்னிட்டு கோமதி அம்பாள் காலை 5.40 மணிக்கு தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. காலை 10.30 மணிக்கு தேரோட்டம் நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு திருவிழா நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. தேரோட்டத்தில் தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன், தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செய லாளர் ராஜா எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. மாநில மகளிர் அணி துணைச் செயலாளருமான ராஜ லெட்சுமி, சங்கரன் கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன், சங்கரன்கோவில் கோவில் துணை ஆணையர் ஜான்சி ராணி, நகராட்சி கமிஷனர் சபாநாயகம், சுகாதார அலுவலர் பாலச்சந்தர், தி.மு.க.வை சேர்ந்த நகர செயலாளர் பிரகாஷ், சீதாலட்சுமி ராம கிருஷ்ணன், சி.எஸ்.எம்.எஸ். சங்கரசுப்பிரமணியன், அனுசியா மாரிமுத்து, அரசு ஒப்பந்ததாரர் கே.எஸ்.எஸ். மாரியப்பன், தொழிலதிபர்கள் திவ்யா ரெங்கன், இசக்கியப்பன், நகர ஓட்டல் உரிமையாளர் சங்க தலைவர் சின்னச்சாமி அ.தி.மு.க. கவுன்சிலர் சங்கரசுப்பிரமணியன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் ரவிச்சந்திரன், நகர செயலாளர் ஆறுமுகம் மற்றும் பிரகாஷ், சபரிநாத், பா.ஜனதா மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தேரோட்டத்தை முன்னிட்டு நகராட்சி சார்பில் ரதவீதிகள் சுத்தம் செய்யப்பட்டு தொடர்ந்து தண்ணீர் தெளிக்கப்பட்டது இருந்தது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.