May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மு.க. ஸ்டாலினிடம் வாழ்த்து

1 min read

Tenkasi South District DMK In-charge M.K. Greetings to Stalin

29.7.2023
தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள சுரண்டை வே.ஜெயபாலன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தி.மு.க. பொறுப்பாளர்

தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சுரண்டை நகர திமுக செயலாளர் வே.ஜெயபாலன் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு க ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்.
அப்போது தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக தன்னை நியமனம் செய்தமைக்கு நன்றி தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், திமுக இளைஞரணி செயலாளரும் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், திமுக அமைப்பு இணைச்செயலாளர் அன்பகம் கலை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி கே எஸ் இளங்கோவன், முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா, ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்த நிகழ்ச்சிகளில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் ஈ.ராஜா, தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் திமுக செயலாளரும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான மா. செல்லத்துரை, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இலத்தூர் பூ. ஆறுமுகச்சாமி, மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் அப்துல் காதர், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் செங்கோட்டை எஸ் எம் ரஹீம், தென்காசி நகர திமுக செயலாளரும், நகர் மன்றத் தலைவருமான ஆர் சாதிர், தென்காசி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வல்லம் எம்.திவான் ஒலி,செங்கோட்டை நகர திமுக செயலாளர் வழக்கறிஞர் ஆவெங்கடேசன், கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீப் ரகுமான், தென்காசி மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் க‌.கனிமொழி மாவட்ட பொருளாளர் எம் ஏ எம் ஷெரிப், ஆலடி எழில்வாணன், ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.பி.எம்.அன்பழகன், தெற்கு ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, கடையநல்லூர் நகர திமுக செயலாளர் அப்பாஸ், செங்கோட்டை ஒன்றிய செயலாளர் ஆ.ரவிசங்கர் கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் க.சீனித்துரை, தென்காசி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.எம்.அழகு சுந்தரம் கடையம் ஒன்றிய செயலாளர் மகேஷ் மாயவன், பண்பொழி பேரூர் திமுக செயலாளரும், பேரூராட்சி மன்ற தலைவருமான கரிசல் அ.ராஜராஜன், மேலகரம் பேரூர் திமுக செயலாளர்
இ.சுடலை, இலஞ்சி பேரூர் திமுக செயலாளர் முத்தையா குற்றாலம் பேரூர் திமுக செயலாளர் குட்டி, தென்காசி இஞ்சி இஸ்மாயில், வெல்டிங் மாரியப்பன், கடையம் முன்னாள் ஒன்றிய திமுக செயலாளர் குமார், சுந்தரபாண்டியபுரம் முன்னாள் பேரூர் திமுக செயலாளர் மாரியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.