July 7, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசி முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் மாவட்ட ஆட்சியர் சந்திப்பு

1 min read

Tenkasi Former DMK District Secretary District Collector meeting

12/8/2023
தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவ பத்மநாதன் நேற்று தென்காசி ஒருங்கிணைந்த வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகளுடன் சென்று ஒருங்கிணைந்த நீதிமன்ற இடம் சம்பந்தமாக மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த கோரிக்கை மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

நீதிமன்றக் கட்டிடம்

தென்காசி மாவட்டத்தில் அமைய இருக்கிற ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் மற்றும் குடியிருப்புக்குக்கான இடம் ஆய்க்குடி கிராமம் சர்வே எண் 84 ல் 5.54 ஹெக்டேர்
மற்றும் சர்வே எண் 97. 1.95 ஹெக்டேர் ஆக மொத்தம்
18 .5 ஏக்கர் நிலம் நீதிமன்றம் கட்டிடம் கட்டுவதற்காக பரிந்துரைக்கப்பட்டது.

தென்காசி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்கான அரசாணை கடந்த 07.12.2022 தமிழக அரசால் அரசாணை ( எண் 917) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது நீதிமன்ற கட்டிடம் கட்டுவதற்கு பரிந்துரைக்கப் பட்ட இடத்தில் பிற கட்டிடங்கள் கட்டுவதற்கு பரிந்துரைக்கப்பட்டதாக
தகவல் அறிந்து உடனடியாக
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந் திரனை சந்தித்து பேசினார்.

அப்போது ஏற்கனவே மேற்கண்ட இடத்தில் நீதிமன்றமும் நீதிபதிகள் குடியிருப்பும் அமைவதற்கு ஆவணம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். இது சம்பந்தமாக ஏற்கனவே பாதை பிள்ளையான் கட்டளை பாத்தியப்பட்ட இடத்தை இந்த இடத்திற்கு செல்வதற்கு வழி பாதை அமைத்து கொடுக்க வேண்டும் என்று ஏற்கனவே இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் குமரகுருபரனை சந்தித்து மனுக்களையும் வழங்கி இருந்தநிலையில்

அன்றைக்கு பொறுப்பில் இருந்த மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகாஷிடம் இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் வழிப்பாதை சம்பந்தமாக சில விதிமுறைகள் இருப்பதை சுட்டிக்காட்டி பேசினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் சீவநல்லூர் கோ.சாமித்துரை, கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் க.சீனித்துரை, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சு.வேலுச்சாமி வழக்கறிஞர் சங்கத் தலைவர் புகழேந்தி, கைலாசம் ,மாடகண்ணு, வீரமணிகண்டன், ராஜா முத்துக்குமாரசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.