கடையம் நித்திய கல்யாணி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
1 min read
Kumbabhishekam at Kadayam Nithya Kalyani Amman Temple
7.7.2025
கடையம் பஸ்நிலையத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரம் மேற்கே நித்திய கல்யாணி அம்மன் உடனுறை விஸ்வவன நாதர் கோவில் உள்ளது. தசரதர், ராமபிரான் வழிபட்ட சிவபெருமான் இத்தல சிவன் ஆவார்.
இங்கு திருப்பணி மேற்கொள்ளப்பட்டது. ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ராமன் தலைமையிலான் திருப்பணிக்குழு இப்பணியை மேற்கொண்டது. கோவில் பல சன்னதிகள் புதுப்பிக்கப்பட்டது. கோவில் முழுவதும் கிரானைட் தளம் மாற்றப்பட்டு கருங்கல் தளம் போடப்பட்டது.
இதனை அடுத்து கும்பாபிஷேகத்திற்காக கோவிலின் வடபுறம் வயல்வெளியில் யாகசாலை அமைக்கப்பட்டது. மொதம்3 30 குண்டங்கள் அமைக்கப்பட்டன. கடந்த 2-ந் தேதி புதன்கிழமை கணபதி ஹோமம் நடந்தது. இதனை அடுத்த யாகசாலை பூஜை தொடங்கியது. இன்று காலை 9 மணிக்கு யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கலசங்களை சுமந்தபடி பட்டாச்சாரியார்கள் புறப்பட்டனர். அவர்கள் கலசங்களில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர்.
அப்போது பக்தி கோஷம் முழங்கப்பட்டது. வானத்தில் கருடன் வலம் வந்தது.
அதன்பின் மூலவர்களுக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. மாலையில் திருக்கல்யாணம் நடைபெற்றது. வீதிஉலாவும் நடந்தது.