செந்தில் பாலாஜி சகோதரர் கைதா?: அமலாக்கத்துறை விளக்கம்
1 min read
Is Senthil Balaji Brother Kaida?: The Enforcement Directorate Explains
14.8.2023
செந்தில் பாலாஜி சகோதரர் கைது செய்யப்பட்டாரா என்பது குறித்து அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது.
செந்தில் பாலாஜி தம்பி
அமைச்சர் செந்தில் பாலாஜி முறைகேடான பண பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கப்பட்ட பிறகு மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்கின் பெயரும் இடம் பெற்றுள்ளது. அசோக் குமாருக்கு 4 முறை சம்மன் அனுப்பப்பட்டது, ஆனால் அவர் ஆஜராகவில்லை.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை கைது செய்து விசாரணை நடத்துவதாக வெளியான தகவலுக்கு அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
அசோக் குமார் கைது செய்யப்படவில்லை. அவருக்கு 4 முறை சம்மன் அனுப்பப்பட்டது, ஆனால் அவர் ஆஜராகவில்லை. அசோக் குமாரின் மனைவி நிர்மலா, நிர்மலாவின் தாய் லட்சுமி என இருவருக்கும் சம்மன் அனுப்பியும் அவர்கள் ஆஜராகவில்லை. செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் 3 பேருக்கும் தொடர்பு இருப்பதாக கருதியதால் சம்மன் அனுப்பப்பட்டது.
கொச்சியில் அசோக்குமார் கைதானதாக வெளியான செய்தி தவறானது.
இவ்வாறு அதில் கூறப்பட்டது.