கடையம பத்திரகாளி அம்மன் சப்பரம் செல்லும் பாதையை சீரமைக்க கோரி நாளை ஆர்ப்பாட்டம்
1 min read
Demonstration tomorrow demanding repair of road leading to Kadayam Patirakali Amman Chapparam
30.8.2023
கடையத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற 18 பட்டி மக்களுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் திருக்கோவில் கடையம் ராமநதி செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இந்த சாலை மிகவும் சிதலமடைந்து பயணம் செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது. ஒவ்வொரு வருடமும் கொடை விழாவின் போது எட்டாம் திருவிழாவின் போது அம்மனை பெரிய தேர் சப்பத்தில் பக்தர்கள் தோளில் சுமந்து செல்வார்கள். சப்பரம் அதிக எடையுடன் இருப்பதால் 4 தண்டயம் கட்டி சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சுமந்து செல் கொண்டு. அந்த சாலை பல ஆண்டுகளாக சிதிலமடைந்து கரடுமுடராக உள்ளது. திருவிழாவின் போது பக்தர்கள் மிகுந்த சிரமம் அடைவர்கள். இதுபற்றி ஊர் மக்கள் பல கோரிக்கை மனுக்கள் அனுப்பியும் பயன் இல்லை. இந்த சாலை தென்பத்து, வடபத்து, மேலப்பத்து, கோணம், பட்ரோட்டி ஆகிய வயல்வெளிக்கு விவசாயிகள் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும். மேலும் நித்திய கல்யாணி அம்மான் உடனுறை வில்வவனநாதர் கோவில், ராமநதி அணை, சூட்சமுடையார் கோவில் மலையடிவாரத்தில் உள்ள தலைமலை அய்யன் கோவிலுக்குச் செலும் பக்தர்களும் இந்த வழியாகத்தான் செல்லவார்கள். தோரணமலைக்கு செல்லும் பக்தர்கள் இந்த வழியை தவிர்த்து மாதாபுரம் வழியாக செல்கிறார்கள்.
இவ்வளவு பயன்பாட்டில் உள்ள சாலையை கடந்த 15 ஆண்டுகளாக ஏன் சீரைமைக்கப்படாமல் உள்ளது என்பது தெரியவில்லை.
எனவே வரும் வருட கொடைக்கு முன்பாக இந்த சாலையை சீரமைத்து தர அனைத்து கட்சிகள் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நாளை (31/08/23) மாலை 5 மணி அளவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவி அருணன் தலைமையில் நடைபெறுகிறது. கடையம் ஸ்ரீ பத்ரகாளி அம்மன் திருக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட 18 பட்டி பொதுமக்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள அன்புடன் வேண்டுகிறோம் என்று போராட்டக்குழு அழைக்கிறது.
இந்த போராட்டத்தில் காந்தியவாதி ராம்மோகன், மு.மாரிக்குமார், மு.கஜேந்திரன், சங்கீதா ஈசாக், கரும்புலி கண்ணன், சு.சந்திரசேகர், சட்டநாதன், மதியழகன், ஆதிதமிழன் அன்பழகன், சுப்பிரமணியன், அப்பு தேவேந்திரன், சங்கர், தங்கப்பாண்டியன், செந்தில்பாண்டியன்,சுரேஷ், தியாகு, ரெயில்வே முருகன், மணிகண்டன் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.