March 27, 2025

Seithi Saral

Tamil News Channel

கடையம், தென்காசியில் நாளை அண்ணாமலை பாதயாத்திரை

1 min read

Annamalai padayatra tomorrow in Tenkasi, Kadayam

3.9.2023
தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் பாரதீய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலையின்
`என் மண் என் மக்கள்’ பாதயாத்திரை நிகழ்ச்சி ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுபற்றி பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரையின் தென்காசி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளரும், கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில துணைத்தலைவருமான அ.ஆனந்தன், தென்காசி மாவட்ட தலைவர் கே.ஏ.ராஜேஷ் ராஜா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறிஇருப்பதாவது:-

தென்காசி நாடாளுமன்ற தொகுதி யில் பாரதீய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரை நிகழ்ச்சி ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவர் 2 நாட்கள் தென்காசி மாவட்டத்தில் பாதயாத்திரை மேற் கொள்கிறார்.அதன்படி நாளை (திங்கட்கிழமை) ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொட்டல்புதூர் பகுதியில் மாலை 3 மணிக்கு தொடங்கி கடையம் பகுதி வரை 5 மணி வரை நடைபெறுகிறது.


கடையம் பகுதியில் வரவேற்க்கும் வகையில் கொடிகள், பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன.

தென்காசி

தென்காசி சட்டமன்ற தொகுதியில் தென்காசி நகரப்பகு தியான கீழப்புலியூரில் மாலை 5.30 மணிக்கு தொடங்கிஇரவு 8 மணிக்கு புதிய பஸ் நிலையத்தில் முடிகிறது. பின்னர் அவர் குற்றாலத்தில் தங்குகிறார்.

5-ந் தேதி கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் கடைய நல்லூர் நகராட்சி பகுதியான மேலகடையநல்லூரில் மாலை 3 மணிக்கு தொடங்கி 5 மணிக்கு கிருஷ்ணாபுரத்தில் முடி கிறது. வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள புளியங்குடி நகராட்சி பகுதியான எலுமிச்சை மார்க்கெட் அருகே மாலை 5.30 மணிக்கு தொடங்கி இரவு 8 மணிக்கு சிந்தாமணி பஸ் நிலையத்தில் பாதயாத்திரை முடிவடைகிறது.

இந்த நிகழ்ச்சியில் தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று அண்ணாமலை பாதயாத்திரை தென்காசி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளரும், கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில துணைத்தலைவருமான அ.ஆனந்தன், தென்காசி மாவட்ட தலைவர் கே.ஏ.ராஜேஷ் ராஜா ஆகியோர் கேட்டு கொண்டுள்ளார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.