உதயநிதி ஸ்டாலின் நாளை தென்காசி வருகை
1 min readUdayanidhi Stalin to visit Tenkasi tomorrow
3.9.2023
திமுக மாநில இளைஞர் அணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நாளை தென்காசி வருகிறார்.
இது பற்றி தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே. ஜெயபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில்
கலந்து கொள்வதற்காக முதன் முதலாக நாளை தென்காசி மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.
இந்நிலையில் இன்று 4-ம் தேதி இரவு 8 மணிக்கு ஆலங்குளம் வழியாக குற்றாலத்திற்கு வருகிறார். தென்காசி மாவட்ட எல்லையான ஆலங்குளத்தில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அவருக்கு சிறப் பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள் திமுக நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள்,திமுக தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
மேலும் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் 557 பேருக்கு விளையாட்டு உபகரணங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார். அதனைத் தொடர்ந்து இரவில் குற்றாலத்தில் தங்குகிறார்.
நாளை 5-ம் தேதி காலை 10 மணிக்கு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அதனைத் தொடர்ந்து நாளை மாலை 3 மணிக்கு தென்காசி இசக்கி மஹால் வளாகத்தில் நடைபெறும் திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் 1,000 திமுக மூத்த முன்னோடிகளுக்கு தலா ரூ.10,000 வீதம் மொத்தம் ரூபாய் .1 கோடி ஊக்கத்தொகை மற்றும் பொற்கிழியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார். தொடர்ந்து அதே வளாகத்தில் நடைபெறும் தி.மு.க. இளைஞரணி ஆலோசனை கூட்டத்திலும் கலந்து கொண்டு பேசுகிறார்.
தென்காசி தெற்கு மாவட்டத்திற்கு முதன்முறையாக வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்பு நிகழ்ச்சி உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் மகத்தான வெற்றி பெற தென்காசி தெற்கு மாவட்ட தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திமுக மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மற்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவரும் பெரும் திரளாக திரண்டு வந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.இவ்வாறு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.