ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தி சவால்களை சமாளிக்கலாம்- முன்னாள் தேர்தல் ஆணையர்கள் கருத்து
1 min readChallenges can be overcome by conducting simultaneous elections – opined former Election Commissioners
3.9.2023
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தி சவால்களை சமாளிக்கலாம் என்று முன்னாள் தேர்தல் ஆணையர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தேர்தல்
நாட்டில் கடந்த 1967-ம் ஆண்டு வரை மக்களவை தேர்தலும், மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்களும் ஒரே நேரத்தில்தான் நடந்துள்ளன. ஆனால், அதன் பிறகு சட்டப்பேரவைகள் மற்றும் மக்களவைகள் அதன் 5 ஆண்டு பதவிக் காலத்துக்கு முன்பே கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டதால், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் ஒழுங்குமுறை மாறிவிட்டது.
கடந்த 2022-ம் ஆண்டு அப்போதைய தலைமை தேர்தல் ஆணையராக இருந்த சுஷில் சந்திரா, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயார் என கூறினார். ஆனால் தற்போதுள்ள தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார், கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
மக்களவைத் தேர்தலுடன், சட்டப்பேரவை தேர்தலை நடத்த சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என தேர்தல் ஆணையம் கடந்த 1982-ம் ஆண்டு முதல் பரிந்துரை செய்து வருகிறது. ‘‘ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியம். இதற்கு அரசியலமைப்பு மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும். 30 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்களித்த பின் ஒப்புகை சீட்டு வழங்கும் விவிபாட் இயந்திரங்கள் தயாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு அதிக கால அவகாசம் மற்றும் பணம் தேவை என கடந்த 2015-ம் ஆண்டு மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தோம்’’ என முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த, தேர்தல் ஆணையத்துக்கு 30 லட்சம் எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவை என மதிப் பிடப்பட்டுள்ளது. தற்போது தேர்தல் ஆணையத்திடம் 17.77 லட்சம் எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்களும், 13.06 லட்சம் கட்டுப்பாட்டு யூனிட்டுகளும் உள்ளன. மேலும் 13.26 லட்சம் வாக்குப் பதிவு இயந்திரங்களும், 9.09லட்சம் கட்டுப்பாட்டு யூனிட்டுகளும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் எலக்ட்ரானிக் வாக்குப் பதிவு இயந்திரங்களின் மொத்த எண்ணிக்கை 31.03 லட்சமாகவும், கட்டுப்பாட்டு இயந்திரங்களின் எண்ணிக்கை 22.15 லட்சமாகும் அதிகரிக்கும்