சேர்வைகாரன் பட்டி திமுக பிரமுகருக்கு உதவித்தொகை
1 min read
Scholarship for Servaikaran Patti DMK personality
3.9.2023
தென்காசி தெற்கு மாவட்டம் கடையம் அருகே
விபத்தில் காயமடைந்த சேர்வைக்காரன்பட்டி திமுக பிரமுகருக்கு மருத்துவ உதவித்தொகையினை முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் வழங்கினார்.
தென்காசி தெற்கு மாவட்டம், கடையம் வடக்கு ஒன்றியம் சேர்வைகாரன்பட்டியைச் சேர்ந்தவர் திமுக நிர்வாகி மாரிமுத்து. இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற வாகன விபத்தில் காயமடைந்து, மருத்துவ சிகிச்சை பெற்று ஓய்வில் இருந்து வருகிறார். இது பற்றி தகவல் அறிந்த தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன், மாரிமுத்துவின் வீட்டிற்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். தொடர்ந்து திமுக சார்பில் மருத்துவ செலவுக்கு நிதியுதவியும் வழங்கினார்.
அப்போது சேர்வைக்காரன்பட்டி ஊராட்சி மன்ற தலைவரும், திமுக பொதுக்குழு உறுப்பினருமான ரவிச்சந்திரன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் சொட்டு சுப்பிரமணியன், ஒன்றிய கவுன்சிலர் சங்கர், அமைப்புசாரா ஓட்டுனர் மாவட்ட துணை அமைப்பாளர் ஜெயசிங், அருணாசலம்பட்டி கிளை செயலாளர் ராஜேந்திரன் சேர்வைக்காரன்பட்டி கிளை செயலாளர் முருகன், பொடியனூர் கிளை செயலாளர் பாண்டியன், நவீன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.