சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
1 min readSonia Gandhi admitted to hospital
3.9.2023
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லேசான காய்ச்சல் காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.