June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

சனாதன எதிர்ப்புக்காக உருவாக்கப்பட்டிருக்கும் கூட்டணிதான் “இந்தியா”- பொன்முடி பேச்சு

1 min read

India” – Ponmudi talk is the alliance formed for anti-Sanatana

12.9.2023
சனாதன எதிர்ப்புக்காக உருவாக்கப்பட்டிருக்கும் கூட்டணிதான் “இந்தியா” என்று அமைச்சர் பொன்முடியின் பேசியதை தற்போது அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.

பொன்முடி பேச்சு

சனாதனதர்ம ஒழிப்பு பேச்சில் அடுத்த சர்ச்சை வெடித்துள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட அதே சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் பொன்முடியும் கலந்து கொண்டிருக்கிறார். அவர் பேசும்போது, சனாதனதர்ம எதிர்ப்புக்காகவே இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டிருப்பதாக பேசிய வீடியோவை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை நேற்று தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அமைச்சர் பொன் முடி பேசியிருப்பதாவது:-
பத்திரிக்கைகள், ஊடகங்கள் வாயிலாக நம்முடைய சனாதன எதிர்ப்பு கொள்கையை இங்கு இருப்பவர்கள் சொல்லிவிட்டார்கள். இந்தியா என்பது சனாதன எதிர்ப்புக்காக உருவாக்கப்பட்டிருக்கும் கூட்டணிதான். இந்தியா கூட்டணியில் எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் சனாதனத்தை எதிர்க்க வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த வேறுபட்ட கருத்தும் இல்லை.

இங்கே இருப்பவர்களெல்லாம் சமத்துவத்தை உருவாக்க வேண்டும். சிறுபான்மை சமூகத்தை காப்பாற்ற வேண்டும். ஆண்-பெண் சமத்துவத்தை உருவாக்க வேண்டும் என்ற சமூக சிந்தனையோடு உருவாக்கப்பட்டதுதான், 26 கட்சிகள் இணைந்து இந்த கூட்டணியை உருவாக்கி இருப்பதன் நோக்கம்.
வந்திருக்கிற நீங்கள், நாம் என்னதான் செய்தாலும் அரசியலில் வெற்றி பெற்று அங்கே அமர வேண்டும்.
இவ்வாறு அதில் பேசி இருக்கிறார்.

அமைச்சர் பொன்முடியின் இந்த பேச்சு வெளியானதும் மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.