June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீர், தானாக இந்தியாவுடன் இணையும்- மத்திய மந்திரி வி.கே.சிங் நம்பிக்கை

1 min read

Union Minister VK Singh believes that Pakistan-held Kashmir will automatically join India

12-9-2023
பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீர், தானாக இந்தியாவுடன் இணையும் என்று மத்திய மந்திரி வி.கே.சிங் கூறியுள்ளார்.

விஜய் குமார் சிங்

இந்திய ராணுவத்தின் மிக உயர்ந்த பதவி வகித்தவர், நான்கு நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஜெனரல். விஜய் குமார் சிங் (வயது 72).

ஜெனரல். வி.கே. சிங், தனது பதவிக்காலம் முடிந்த பிறகு, ஆளும் பா.ஜ.க. அரசால் அமைச்சராக பதவியில் அமர்த்தப்பட்டவர். இவர் தற்போது சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சரவையில் அமைச்சராக உள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க. சார்பாக நடந்து வரும் பரிவர்த்தன் சங்கல்ப யாத்திரையில் கலந்து கொண்டு பல மத்திய அமைச்சர்களும் உரையாற்றி வருகின்றனர்.
இந்த யாத்திரையின் ஒரு பகுதியாக அம்மாநில டவுஸா மாவட்டத்தின் தலைநகர் டவுஸாவில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஜெனரல். வி.கே. சிங் கலந்து கொண்டார்.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்குமிடையேயான உறவு குறித்து கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
1947 முதல் பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீர் பகுதியில் மொத்தம் சுமார் 40 லட்சம் மக்கள் தொகை கொண்ட இப்பிராந்தியத்தில் 97 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள். இது, ஆஸாத் காஷ்மீர் மற்றும் கில்கிட்-பல்டிஸ்தான் என இரு பகுதிகளாக உள்ளது. சில நாட்களுக்கு முன் கில்கிட்-பல்டிஸ்தான் பகுதியில் ஸ்கர்டு டவுனில் பாகிஸ்தானின் புது சட்டங்களுக்கெதிராக ஒரு பேரணி நடைபெற்றது. அது பாகிஸ்தான் அரசுக்கெதிரான பேரணியாக மாறி. இந்தியாவின் கார்கில் பகுதிக்கு செல்லும் பாதை திறந்து விடப்பட வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்ட ஷியா பிரிவினர் கோஷமிட்டனர்.
“பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீர் தானாக இந்தியாவுடன் இணைந்து விடும். சிறிது காலம் காத்திருங்கள்
இவ்வாறு இச்சம்பவம் குறித்த கேள்விக்கு வி.கே.சிங் பதிலளித்த.
இவரது கருத்தை மகாராஷ்டிர மாநிலத்தின் சிவ சேனா (உத்தவ் பிரிவு) கட்சியின் சஞ்சய் ராவத் வரவேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *