தென்காசி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைப்பதற்கான இடம் அறிவிப்பு
1 min read
Ganesha idols in Tenkasi district Notice of place of dissolution
14.9.2023
தென்காசி மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள் பற்றி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
விநாயகர் சிலைகள் கரைப்பதற்காக நீர் நிலைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
கடையம் -இராமநதி அணை, ஆழ்வார்குறிச்சி – கடனா நதி, தென்காசி – யானை பாலம் அருகில், குற்றாலம் -சிற்றாறு இலஞ்சி, செங்கோட்டை -குண்டாறு அணை, புளியரை- ஹரிகர ஆறு லாலா குடியிருப்பு, அச்சன்புதூர் – ஹனுமான் நதி கரிசல் குடியிருப்பு அருகில், .பாவூர்சத்திரம்-குளம் பாவூர்சத்திரம்,
கடையநல்லூர் – தாமரை குளம், மேல கடையநல்லூர், கடையநல்லூர்-கருப்பாநதி அணை, வாசுதேவநல்லூர்-சிமெண்ட் தொட்டி ராஜ் பிரிக்ஸ் சேம்பர் நெல்கட்டும்செவல், வாசுதேவநல்லூர் – ராயகிரி பிள்ளையார் மந்தையாறு.
விநாயகர் சதுர்த்தி விழாவினை சூற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாடும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை மேலும் விவரங்களுக்கு அணுகலாம்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.