“இந்த பெண்களால் நான் 13 வருடம் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளேன்”ஆஜராகிய பின் சீமான் பேட்டி
1 min read
“I have been abused by these women for 13 years”- Seaman interview after the presentation
18/9/2023
இந்த பெண்களால் நான் 13 வருடம் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளேன் என்று போலீஸ் நிலையத்தில் ஆஜரான சீமான் கூறினார்.
சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மீது நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில், வளசரவாக்கம் போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்பாக போலீசார் இரண்டு முறை சம்மன் அனுப்பியும் சீமான் நேரில் ஆஜராகவில்லை.
இதற்கிடையே திடீரென விஜயலட்சுமி, சீமான் மீதான வழக்கை வாபஸ் பெற்றார். இருந்தாலும் வளசரவாக்கம் போலீசார் விசாரணை நடத்த சம்மன் அனுப்பினர். இதனைத் தொடர்ந்து இன்று வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் சீமான் ஆஜரானார். ஆஜராகியபின், வெளியில் வந்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. தூண்டுதல்
2012-ம் ஆண்டு ஏற்கனவே வழக்கை திரும்பப் பெற்றிருந்தார். தற்போது மீண்டும் திரும்பப் பெற்றுள்ளார். 9-ந்தேதி ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தார்கள். வர முடியாது எனத் தெரிவித்தேன். அதன்பிறகு இன்றைய தினம் ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தனர். சம்மன் அனுப்பி வரவில்லை என்ற குற்றச்சாட்டு வரக்கூடாது என்பதால் நேரில் ஆஜராகினேன். 2011-ம் ஆண்டு இந்த வழக்கு கொடுக்கப்பட்டது. கொடுக்கப்பட்டதே திமுக-காங்கிரஸ் தூண்டுதல் பேரில்தான்.
ஜெயலலிதா அவர்கள் உண்மைத்தன்மை என்ன? என்று கேட்க, அதில் இல்லை என்றதும் தூரத்தூக்கி போட்டுவிட்டார்கள். பின்னர் எடப்பாடி ஆட்சிக் காலத்தில் கொடுக்கப்பட்டது. என்னைப் பற்றி தெரியும் என்பதால் அவர்கள் அதை எடுத்துக் கொள்ளவில்லை.
128 வழக்குகள்
இவர்களால் சமாளிக்க முடியவில்லை. இதை வைத்தாவது… மக்களுக்கு போராடிய வகையில் 128 வழக்குகள் உள்ளன. அதை எடுக்க முடியவில்லை. பெண் வழக்கால், அசிங்கப்படுத்தி விடலாம். மக்களிடம் இருந்து அந்நியப்படுத்தி விடலாம். நன்மதிப்பை சிதைத்து விடலாம் என்ற நோக்கத்தில் செய்யப்பட்டது. ஒரு மாதகாலமாக பேசக்கூடிய பேச்சா… நாட்டில் எந்த பிரச்சினையும் இல்லையா… பணம் கொடுக்கப்பட்டதா, நகை கொடுக்கப்பட்டதா? என கேள்வி கேட்டகப்பட்டது. ஒன்னும் கொடுக்கல…. என்றேன்
இந்த பெண்களால் நான் 13 வருடம் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளேன். நான், எனது குடும்பம், என்னைச் சார்ந்து இருக்கும் லட்சக்கணக்கானோர் பட்ட கஷ்டம்.
ஒரு பெண், இன்னொரு பெண்ணுடன் சேர்ந்து ஒருவரை வன்கொடுமை செய்வதை விட கொடுமை உள்ளதா?. எனது மனைவி ஆஜராகுவதாக தெரிவித்தார். அதனால் அழைத்து வந்தேன். மனைவி ஆஜராக முடியாது என்றார்கள். சரி சும்மாவது வருகிறேன் என்றார். அதனால் அழைத்து வந்தேன். என்னுடைய மவுனத்தில் அதிகமாக பொய் பேசிவிட்டீர்கள். திருமணம், கருக்கலைப்பு எனக் கூறுகிறார்கள். அதற்கான ஆதாரம் உள்ளதா?. எனது திருமணம் 2013-ல் நடைபெற்றது. அப்போது ஆதாரத்தை காட்டி நிறுத்தியிருக்கலாமே?.
8 முறை கருக்கலைப்பு என்பது நகைச்சுவையாக உள்ளது. வீரலட்சுமி போன்றோருக்கு மன்னிப்பு கிடையாது, பொது மன்னிப்பு கேட்கனும். என்னை அசிங்கப்படுத்தும் நபர்களுக்கும் சேர்த்துதான் போராடிக் கொண்டிருக்கிறேன்.
இவ்வாறு சீமான் தெரிவித்தார்.