பாட்டப்பத்து கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப பயிற்சி
1 min read
Agricultural Technology Training in Paattappathu Village
10.6.2026
தென்காசி வட்டாரம் பாட்டப்பத்து கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப பயிற்சி மேலாண்மை முகமை (ATMA) திட்டத்தின் கீழ் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மற்றும் e-NAM பற்றிய விழிப்புணர்வு உள் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது.
இந்த பயிற்சியில் தென்காசி மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) வசந்தா தலைமை யேற்று பாரம்பரிய நெல் இரகங்கள் சாகுபடி மற்றும்
மதிப்பு கூட்டுதல் குறித்து சிறப்புரை ஆற்றினார்.
தென்காசி வட்டார வேளாண்மை உதவி
இயக்குநர் திருமலைச்சாமி அவர்கள் சமச்சீர் உர மேலாண்மை பற்றி தொழில்நுட்ப உரை வழங்கி வேளாண்மை விரிவாக்க மையத்தில் வழங்கப்படும் இடுபொருட்கள் பற்றியும் வேளாண்மைத்துறை மூலம் வழங்கப்படும் மானிய விபரங்கள் குறித்தும் எடுத்து கூறினார்.
ஓய்வு பெற்ற வேளாண்மை அலுவலர் இராஜேந்திர கணேசன் மின்னனு தேசிய வேளாண் சந்தை (E-Nam) மூலம் விவசாயிகளின் விளைபொருட்களை விற்பனை செய்யும் முறைகள் குறித்தும் அதன் மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கும் பயன்கள் பற்றியும் தொழில்நுட்ப உரை வழங்கினார்.
மேலும் கடையநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் கண்காணிப்பாளர் உமாதேவி விளை பொருட்களை சேமித்து வைத்தல் மேலும் பொருளீட்டுக்கடன் பெறுவது குறித்து விளக்கி கூறினார்.
தென்காசி வேளாண்மை அலுவலர் (வேளாண் வணிகம்) முகைதீன்பிச்சை வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை எடுத்து கூறினார்.
மேலும் அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜோதிலட்சுமி அட்மா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிற்சிகள் மற்றும் செயல்விளக்கங்கள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்து கூறினார். இந்த பயிற்சியின் இறுதியாக உதவி வேளாண்மை அலுவலர் செந்தில்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.
இந்த பயிற்சிக்கு தேவையான பணிகளை உதவி வேளாண்மை அலுவலர் அருண்குமார் மற்றும் அட்மா உதவி தொழில்நுட்ப வல்லுநர்கள், டாங்கை, திருமலைப்பாண்டியன் ஆகியோர் செய்திருந்தனர்.