குற்றாலத்தில் 15 அடி நீள ராஜ நாகம்
1 min read
A 15 feet long Raja Nagam in the courtyard
19.9.2023
குற்றாலம் மெயின் அருவி பகுதியில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகம் அருகில் நடமாடி பொதுமக்களை அச்சுறுத்திய சுமார் 15 அடி நீளம் உள்ள ராஜ நாகத்தை தென்காசி தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் லாபகமாக பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட்டனர்
குற்றாலம் திருக்குற்றால நாத சாமி திருக்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகம் அருகில் நடமாடிய 15 அடி நீளம் உள்ள ராஜ நாகத்தை பார்த்து பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இது பற்றி உதவி ஆணையர் அலுவலக
தலைமை கணக்கர் அழகு ராஜேஸ்வரி தென்காசி தீயணைப்பு மற்றும் மீட்பு துறை அலுவலருக்கு தகவல் தெரிவித்தார்
தகவலறிந்த தென்காசி தீணணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் பிரதீப்குமார் தலைமையில் தீயணைப்பு படைவீரர்கள் வெள்ளபாண்டியன் விஸ்வநாதன், சுந்தர் ஆகிய குழுவினருடன் விரைந்து சென்று பார்த்த போது ராஜநாகம் என அறியப்பட்டது. உடன் மாவட்ட அலுவலர் கணேசன் அவர்களின் அறிவுரைப்படி,வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடம் வந்த வனத்துறையினர் இந்த ராஜ நாகத்தை எங்களால் பிடிக்க இயலாது என்றும் தீயணைப்பு துறையினர் பிடித்து தந்தால் பெற்று கொள்வதாகவும் தெரிவித்தார்கள்.
உடனடியாக தென்காசி தீயணைப்பு துறை அலுவலர் மற்றும் பணியாளர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து ராஜநாகத்தை லாவகமாக பிடித்தார்கள். இந்த ராஜநாகம் அளவீடு செய்ய பட்டதில் 15 அடிக்கு மேல் இருந்தது.பிடிபட்ட பாம்பு அடர்ந்த வனப்பகுதியில் தீயணைப்பு துறையினரால் விடப்பட்டது.அதன் பின்னரே கோவிலுக்கு வந்த பக்தர்கள் கூடியிருந்த சுமார் 500 மேற்பபட்ட பொதுமக்கள் இந்து சமய இறநிலையத்ததுறை அலுவலர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள்.தீயணைப்புத் துறை அலுவலர் மற்றும் பணியாளர்களின் வீர தீர மிக்க செயலை அனைவரும் வெகுவாக கைதட்டி ஆரவாரம் செய்து வாழ்த்தி பாராட்டினார்கள்