ஆழ்வார்குறிச்சியில் முப்பெரும் விழா
1 min readThree grand festival in Alwarkurichi
19.9.2023
தென்காசி மாவட்ம் ஆழ்வார்குறிச்சி கீழத்தெரு, சைவ வேளாளர் சங்கம் சார்பாக 152 வ உ சி அவர்களின் பிறந்தநாள் விழா 21ஆம் ஆண்டு சங்க ஆண்டு விழா மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா ஜெய்கிந்த் செண்பகராமன் பிள்ளை அவர்களின் 132வது பிறந்த நாள் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது
இந்த விழாவுக்கு மேனாள் தலைவர் மு.சஙகநாரயணன் பிள்ளை
தலைமை வகித்து தலைமையுரை ஆற்றினார்.
பேரூராட்சி மன்ற உறுப்பினர்
ஆர்.நெல்லையப்பன் பிள்ளை, மேனாள் துணைதலைவர் மாரியப்பன் பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆழ்வார்குறிச்சி சங்க செயலாளரும் மற்றும் தமிழ்நாடு சைவ வேளாளர் சங்க தென்காசி மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் ஆ.சை.மாணிக்கம் வரவேற்புறையாற்றினார்.
மாணவிகள் ப.சுமித்ரா, சை.சத்ய ஸ்ரீ, மாணவர்கள் ச.பரத்சங்கர், மு.விஷ்ணு சால்வை அணிவித்து கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
நல்லாசிரியர் எஸ்.மாடசாமி ஸ்ரீ பரமகல்யாணி கல்யாண மண்டப மேலாளர் நா. சிவராமன்,ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஆர்..நெல்லையப்பன்,
தா.ஆறுமுகம், சு.பண்டாரம்,
சாவத்தூர் சங்க தலைவர் ந.ஆறுமுகம் பிள்ளை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
ஸ்ரீ பரமகல்யாணி பள்ளிகளின் செயலாளர் முனைவர் மு.சுந்தரம் சிறப்புரை ஆற்றினார்.
மாணவ, மாணவிகளின் சார்பாக செல்வி ப.சுமித்ராவும் பெற்றோர்களின் சார்பாக ச.அழகு மீணாட்சி(எ) மீனா, மு.சண்முகசுந்தரி , ரேவதி ஆகியோர் ஏற்புரையாற்றி னார்கள்.முடிவில் சங்க பொருளாளர் ந.சுப்பிரமணியன் நன்றி கூறினார்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை செயலாளர் ஆ.சை.மாணிக்கம், பொருளாளர் ந.சுப்பிரமணியன்,
கு.முத்து சண்முகம்(எ) ரமேஷ், மு.ராம்குமார்(எ) தம்பு ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.