May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

கர்நாடகாவில் நாளை மறுநாள் முழு அடைப்பு

1 min read

Full lockdown in Karnataka tomorrow

28.9.2023
கர்நாடகாவில் நாளை மறுநாள் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்துக்கு 2ஆயிரம் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

காவிரி நீர் பிரச்சினை

சுப்ரீம் கோர்ட்டு தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து கர்நாடகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
நேற்றுமுன்தினம் பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு நாளை மறுநாள் (29-ந் தேதி) கர்நாடக மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த போராட்டத்துக்கு கன்னட சலுவளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமை தாங்குகிறார். இது குறித்து வாட்டாள் நாகராஜ் கூறியதாவது:- நாங்கள் வருகிற 29-ந் தேதி கர்நாடகாவில் முழு அடைப்பு நடத்த முடிவு செய்துள்ளோம். அன்றைய தினம் பெங்களூருவில் கவர்னர் மாளிகையை முற்றுகையிடுவோம். பெங்களூரு முழு அடைப்பு வேண்டாம் என்று நாங்கள் கூறினோம். ஆனால் அதை நடத்தியவர்கள் ஏற்கவில்லை. பெங்களூரு மட்டுமே கர்நாடகம் இல்லை. எங்களின் குரல் டெல்லியில் உள்ள பிரதமருக்கு கேட்க வேண்டும். இந்த போராட்டத்தில் 2,000 அமைப்புகள் பங்கேற்கும். திரைத்துறை, உற்பத்தி துறை, ஓட்டல், போக்குவரத்து உட்பட அனைத்து துறையினர், விமான நிலைய ஊழியர்கள் பந்த்க்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். நேற்று பெங்களூரில் இவ்வளவு பெரிய அளவில் போலீசார் குவிக்கப்பட்டதை நான் பார்த்ததில்லை.
வெள்ளிக்கிழமை நடைபெறும் போராட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பந்த் நடத்துவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
கர்நாடக முழு அடைப்பு காரணமாக, பெங்களூரு பல்கலைக்கழகம் வெள்ளிக்கிழமை நடத்த திட்டமிட்ட 58-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவை ஒத்திவைத்துள்ளது. புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

நாளை மறுநாள் நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்தையொட்டி மேட்டூர் அருகே உள்ள தமிழக-கர்நாடகா எல்லை நுழைவுவாயில், ஓசூர் அருகே உள்ள நுழைவு வாயில், ஈராடு மாவட்டம் தாளவாடி நுழைவுவாயில் வழியாக தமிழக பஸ்கள் மற்றும் கனரக, இலகு ரக வாகனங்கள் இயக்கப்படாது என தெரிகிறது. எனவே வாகனங்கள் அனைத்தும் தமிழக எல்லை பகுதி வரை மட்டுமே செல்லும். எல்லையில் உள்ள சோதனை சாவடியில் தமிழக போலீசார் தீவிர வாகன சோதனை, கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.