May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

”இந்தியா உடனான உறவு முக்கியமானது” – கனடா பாதுகாப்பு மந்திரி பில் பிளேர்

1 min read

“Relationship with India is important” – Canadian Defense Minister Bill Blair

29/9/2023
இந்தியா உடனான உறவு கனடாவுக்கு மிகவும் முக்கியம் என்று அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேர் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதி கொலை

காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார்(வயழ 45) கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த ஜூன் 18-ம் தேதி கொல்லப்பட்டார். ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை தீவிரவாதி என கடந்த 2020-ல் இந்தியா அறிவித்திருந்தது. இந்நிலையில், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய முகவர்களுக்குத் தொடர்பு இருப்பதாக நம்பத்தகுந்த தகவல் கிடைத்திருக்கிறது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சில நாட்களுக்கு முன் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை நாட்டை விட்டு வெளியேறுமாறு கனடா அறிவித்தது.

இதையடுத்து, இதற்குப் பதிலடியாக இந்தியாவில் உள்ள கனடா தூதரை நாட்டை விட்டு உடனடியாக வெளியேறுமாறு இந்தியா உத்தரவிட்டது. மேலும், கனடாவைச் சேர்ந்தவர்களுக்கு இந்திய விசா வழங்கப்படுவதை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தது.

இரு நாட்டு அரசுகளுக்கு இடையேயான இந்த மோதல் காரணமாக முன் எப்போதும் இல்லாத அளவு இருதரப்பு உறவு பாதிக்கப்பட்டுள்ளது.

‘கனடாவுக்கு முக்கியம்’

இந்நிலையில், இந்தியாவின் உறவு கனடாவுக்கு முக்கியம் என்று அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் பில் பிளேர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தியா உடனான உறவு கனடாவுக்கு மிகவும் முக்கியம். தற்போதுள்ள சூழலை நாங்கள் புரிந்து கொள்கிறோம். இந்தியா உடனான உறவை கனடா மிகவும் மதிக்கிறது. இது ஒரு சவாலான விஷயம். எங்கள் சட்டத்தை, குடிமக்களை பாதுகாக்கும் பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. அதே நேரத்தில் ஒரு முழுமையான விசாரணையை நடத்தி உண்மையைக் கண்டறிவதற்கும் எங்களுக்கு பொறுப்பு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.