May 9, 2024

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்டத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழா கருத்தரங்கம்

1 min read

Karunanidhi Centenary Seminar in Tenkasi District

30.9.2023
தென்காசி மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கருத்தரங்குகள் நடைபெற உள்ளது.

இதுபற்றி தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை இரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் தொடர்பாசு பல்வேறு நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிகழ்ச்சிகளை நடத்துவதற்கென தமிழ்நாடு அரசால் 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அக்குழுக்களில் ஒன்றான சட்டமன்ற நாயகர்- கலைஞர்’ என்ற குழு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் திரு.மு.அப்பாவு அவர்கள் தலைமையில் முன்னாள் பேரவைத் தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்/நடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்களை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலுமுள்ள பள்ளிகள் கல்லூரிகளில் (ஒரு மாவட்டத்திற்கு 3 பள்ளிகள் மற்றும் 3 கல்லூரிகள் என்ற வகையில்) “நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர் சட்டமன்றத்தின்மூலம் சமூக முன்னேற்றத்திற்கு ஆற்றிய சாதனைகளில் மாணவர்களை ஈர்த்தது” என்ற தலைப்பின்கீழ் கருத்தரங்கினை நடத்துவதௌ குழு தீர்மானித்துள்ளது. அந்த அடிப்படையில், இதற்கென 4 துணைக் குழுக்களும் மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களால் அமைக்கப்பட்டுள்ளன.

முன்னாள் பேரவைத் தலைவர் ஆர். ஆவுடையப்பன் முன்னாள் சட்டமன்றப் பேரவைச் செயலாளர் மற்றும் செல்வராஜ் ஆகியோர் உள்ளடங்கிய துணைக் குழுவானது, சட்டமன்ற பேரவை உயர் அலுவலர்களுடன், தென்காசி மாவட்டத்தில் 3 பள்ளிகள் மற்றும் 3 கல்லூரிகளில் கருத்தரங்குகளை வருகிற 4-10.2023 (புதன்கிழமை) மற்றும் 5-10-2023 (வியாழக்கிழபைர் ஆகிய இரண்டு தினங்களில் நடத்துவதென முடிவெடுத்துள்ளது.

இக்கருத்தரங்குகள் 4-10-2023 (புதன்கிழமை) அன்று காலை 10-00 மணியளவில் வாகதேவநல்லூர் தொகுதி, சுப்பிரமணியபுரம், வியாசா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், நண்பகல் 12-00 மணியளவில், புளியங்குடி, டி.என்.புதுக்குடி, இந்து நாடார் உறவின்முறை கமிட்டி மேல்நிலைப் பள்ளியிலும் மற்றும் மாலை 4-00 மணியளவில் தென்காசி தொகுதி, கரண்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் நடைபெறும்,

அதைப்போன்று, மறுநாள் 5-10-2023 (வியாழக்கிழமை அன்று காலை 10-00 மணியளவில், கடையநல்லூர் தொகுதி, அச்சம்பட்டி, எவரெஸ்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியிலும், நண்பகல் 12-00 மணியளவில் கொடிக்குறிச்சி,யுஎஸ்பி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் மற்றும் மாலை 3-30 மணியளவில் தென்காசி தொகுதி, தென்காசி_ஐசிஐ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெறும்.

இந்நிகழ்ச்சிகளில் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்/நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவு மாணவியர், ஆகியோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இவ்வாறு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.