May 9, 2024

Seithi Saral

Tamil News Channel

தென்காசி அருகே இலத்தூரில் கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி

1 min read

Rural Self-Employment Training at Ilathur Near Tenkasi

30.9.2023

தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம், இலத்தூர் கிராமத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மூலம் கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சி யினை மாவட்ட ஆட்சித் தலைவர்துரை.இரவிச் சந்திரன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு சுய உதவிக் குழுக்களுக்கு ரூபாய் 12.55கோடிக்கான கடன் உதவிகளையும், கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் சார்பில் பயிற்சியில் சேர்ந்த மகளிர்களுக்கு சிறப்பு சீருடையும், தொப்பியும் மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் பேசியதாவது;- கிராமிய சுய வேலைவாய்ப்பு நிறுவனம் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்களை பயிற்று வித்து சுயவேலைவாய்ப்பு பெற்று அவர்கள் வாழ்வாதாரம் உயர உதவுகிறது. இந்நிறுவனத்தில் தையல், சணல் பொருட்கள் தயாரித்தல், ஊறுகாய், அப்பளம் தயாரித்தல், ஆரி வேலை, ஒப்பனை நகை தயாரித்தல் போன்று சுமார் 64 வகையான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இதனை நம் தென்காசி மாவட்டத்தின் பயனாளிகள் அனைவரும் இந்நிறுவனத்தின் சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்நிறுவனம் தென்காசி மாவட்டத்திற்கு ஒரு வரப்பிரசாதம், இதனை தென்காசி மாவட்டத்தின் மகளிர் அனைவரும் இந்நிறுவனம் வழங்கும் பயிற்சிகளை பயின்று தங்கள் வாழ்வாதாரத்தினை உயர்த்திக் கொள்ள வேண்டும் என பேசினார். இந்த விழாவில் கிராமிய சுய வேலைவாய்ப்பு நிறுவனத்தின் இயக்குநர் சு.ராஜேஸ்வரி, திருநெல்வேலி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதுநிலை மண்டல மேலாளர் ரவி, முதன்மை மேலாளர் கிருஷ்ணன், இந்தியன் ஓவர்சீஸ் மண்டல அலுவலகத்தின் முதன்மை மேலாளர் கிருஷ்ணன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முன்னோடி வங்கி மேலாளர் ஆ. கணேசன், மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் ஆண்டனி பெர்;னாண்டோ, தென்காசி மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் மாரியம்மாள், மாவட்ட மேலாளர் (தாட்கோ) ரமேஷ்குமார், நபார்டு மாவட்ட வளர்ச்சி மேலாளர் சசிகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.