இந்தியாவில் 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைவு
1 min read
India’s unemployment rate is lowest in 6 years
11.10.2023
இந்தியாவில் 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு
இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளதாக மத்திய அரசின் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 2017-18ம் ஆண்டில் 6 சதவீதம் ஆக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம், அடுத்தடுத்த ஆண்டுகளில் குறைந்து வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
2018-19ம் ஆண்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 5.8 சதவீதமாகவும், தொடர்ந்து 2019-20ல் 4.8 சதவீதமாக குறைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் 2020-21ம் ஆண்டில் 4.2 சதவீதமாக குறைந்த வேலைவாய்ப்பின்மை விகிதம், 2021-22ம் ஆண்டில் 4.1 சதவீதமாகவும், 2022-23ல் 3.2 சதவீதம்மாகவும் குறைந்து வந்துள்ளதாக தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் கூறியுள்ளது.
மேலும் கடந்த 6 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 5.3 சதவீததில் இருந்து 2.4 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 7.7 சதவீததில் இருந்து 5.4 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலங்களில் ஆண்களுக்கான வேலைவாய்ப்பின்மை விகிதம் 6.1 சதவீததில் இருந்து 3.3 சதவீதம் ஆக குறைந்துள்ளது. அதே போல் பெண்களுக்கான வேலைவாய்ப்பின்மை விகிதம் 5.6 சதவீததில் இருந்து 2.9 சதவீதமாக குறைந்திருப்பதாக தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.